சட்டரீதியான பிரச்சனைகளை சந்திக்கும் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு எதிராக ஜெகன் கடிதம்

நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி 11 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

Jagan letter against SC judge comes as he faces rising legal heat

Ananthakrishnan G , Sreenivas Janyala

Jagan letter against SC judge comes as he faces rising legal heat :  உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் அடுத்த தலைமை நீதிபதிக்கான பட்டியலில் இருக்கும் என்.வி. ரமணா, பதவியில் இருக்கும்/ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளை உடனே முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விசாரிக்க இருக்கின்ற நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கடிதம் ரமணா முறைகேடில் ஈடுபட்டுள்ளார் என்று குற்றம் சாட்டுகிறது.

உண்மையில் இது, ஜெகன்மோகனுக்கு எதிராக இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கினை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 9ம் தேதி மீண்டும் துவங்கிய பின்பு தான் நிகழ்ந்தது. அதற்கு அடுத்த நாளே முதல்வரின் முதன்மை ஆலோசகர் அஜெய கல்லம் முதல்வரின் கடிதத்தை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவிடம் ஒப்படைத்தார்.

ஜெகன், பிப்ரவரி 7ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார், மேலும் பயணம் மற்றும் அவரது வேலைகள் குறித்த அட்டவணையை சுட்டிக்காட்டி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி 11 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

அக்டோபர் 9 ஆம் தேதி, விசாரணை மீண்டும் தொடங்கியபோது, ​​ஜெகனின் சட்ட ஆலோசகர் ஜி அசோக் ரெட்டி வழக்கை காணொளி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த விவகாரத்தை நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு தள்ளி வைத்தது.

2011ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.சங்கர் ராவ், டாக்டர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 17, 2011ம் ஆண்டு அன்று சி.பி.ஐயின் ஊழல் தடுப்பு பிரிவு, ஜெகன் மற்றும் இதர நபர்கள் மீது ஐ.பி.சி. பிரிவுகள் 120B (குற்றவியல் சதி) , 409, 420, 468, 471, மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் 11, 12, 13(2) பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அற்க்கை தாக்கல் செய்தது.

சி.பி.ஐயின் ஒழுங்காற்று குழு ஏழு மாத விசாரணைக்கு பிறகு, மார்ச் 31, 2012 அன்று 68 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. கடப்பா தொகுதியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகன் மோகன் அக்யூஸ்ட் நம்பர் 1 என்றும், அவரின் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியது.

அவர் மட்டுமில்லாமல் மேலும் 12 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. ஜெகனின் நம்பிக்கைக்குரிய வி.விஜய் சாய்ரெட்டியும் அதில் ஒருவர். ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சிபிஐ முதன்மைக் குற்றச்சாட்டு என்னவென்றால், அவருடைய தந்தை 2004 முதல் 2009 வரை முதல்வராக இருந்தபோது, அதனை பயன்படுத்தி- சில தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சுரங்க குத்தகைகள் அல்லது நிலங்களை மலிவான விலையில் வழங்கியதால், ஜெகன் மோகனின் பிஸினெஸில் முதலீடு செய்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டது.

To read this article in English

ஜெகனின் நிறுவனத்தில் முதலீடு செய்த நபர்கள் குறித்தும் நிறுவனங்கள் குறித்தும் மேலும் 10 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ விசாரணைகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை அவர் மீது ஐந்து வழக்குகளை பதிவு செய்தது. இந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, சிபிஐ வழக்குகளில் விசாரணை முடிவடையும் வரை, பண மோசடி வழக்குகளை ஒத்திவைக்குமாறு ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

பணமோசடி வழக்குகளும் சிபிஐயின் வழக்குகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. எனவே அவற்றை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டு, அஸ்வினி உபாத்யாய் தொடுத்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தடை விதிக்கவும், நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவில் முடிக்கவும் வேண்டும் என்று கோரப்பட்டது. முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னுடைய பணிக்காலம் முடியும் நவம்பர் 2019 வரை இந்த பணிகளை மேற்கொண்டார். பிறகு எஸ்.ஏ. போப்டேவின் கீழ் இந்த வழக்குகள் வந்தன. தற்போது அதனை நீதிபதி ரமணாவிற்கு அவர் மாற்றம் செய்தார்.

நவம்பர் 2017ம் ஆண்டு, ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கல் அமைத்து நிலுவையில் இருக்கும் வழக்குகளை முடிக்க உத்தரவு பிறப்பித்தார். இந்தியாவில் இது போன்று 12 வழக்காடு மன்றங்கள் உள்ளது. நிலுவையில் இருக்கும் வழக்குகள் அதிகமாகவும், தீர்ப்பாகும் வழக்குகள் குறைவாகவும் உள்ளாது எனவே உச்ச நீதிமன்றம் தொடர்ந்து இந்த வழக்குகளை மேற்பார்வையிட்டு, வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இந்த விவகாரத்தில் அமிகஸ் கியூரியாக உதவ மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை நீதிமன்றம் நியமித்தது. நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இந்த விவகாரத்தை மார்ச் 4, 2020 முதல் விசாரித்து வருகிறது.

மார்ச் 5 ம் தேதி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு முன்னர் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் ”இந்த நேரத்தில் விசாரணை முடிவடையும் என்ற” தகவலையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டது.

வெவ்வேறு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் பின்னர் ஹன்சாரியாவால் தொகுக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டன. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது எதிராக உட்பட சுமார் 4442 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. அவற்றில் 2556 வழக்குகள் தற்போது பணியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீதானது என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு ஒரு காரணம் உயர் நீதிமன்றங்கள் வழங்கிய தடையாகும் என்று அமிகஸ் அறிக்கை கூறியுள்ளது.

செப்டம்பர் 16 ம் தேதி நீதிபதி ரமணா பெஞ்ச், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் இந்த வழக்குகளின் விசாரணையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், ஒரு வழக்கிற்கு தடை விதிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவும் ஒரு சிறப்பு அமர்வினை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அனைவரும் ஜெகன் மோகனின் இந்த கடிதத்திற்கு உச்ச நீதிமன்றம் என்ன பதில் கூறப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் மேடையில் இருந்து, இந்த கடிதம் தொடர்பாக கருத்து தெரிவிப்பது என்பது ஒரு அரசியல் கட்சிக்கான குறைவான பொறுப்பாகும். இந்த சூழலில் பொறுப்பற்ற முறையில் ஒருவர் கருத்து தெரிவிப்பது என்பது தேவையற்றது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jagan letter against sc judge comes as he faces rising legal heat

Next Story
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கடவுளாக வழிபட்ட ரசிகர் மரணம்: கிராம மக்கள் அஞ்சலி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com