Sreenivas Janyala
Jagan Mohan Reddy new announcement : ஆந்திர அரசு செய்யும் அனைத்து வர்த்தக ஒப்பந்தங்கள் / திட்டங்கள் /அதற்கான செலவுகள் குறித்து மக்கள் மத்தியில் அறிவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அம்மாநில அரசு செய்யும் கொள்முதல்கள் மற்றும் செலவுகள் குறித்த அனைத்து தரவுகளும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று கூறியுள்ளார். இது அரசு மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும், ஊழல் லஞ்சமற்ற வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற ஆட்சி நடைபெறுகிறது என்பதை மக்கள் உணர்வதற்கும் வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
Jagan Mohan Reddy new announcement
வியாழக்கிழமை (15/08/2019) அன்று வெளியான இந்த அறிவிப்பின் படி “அரசின் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகள், மற்றும் பப்ளிக்-ப்ரைவேட் செக்டார்கள் கூட்டு முயற்சியிலான பர்ச்சேஸ்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிடுகையில், இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அது போன்று எந்த ஒரு நிகழ்விலும் ஈடுபடாது. அதனால் தான் அரசின் வெளிப்படைத் தன்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பர்ச்சேஸ்கள் அனைத்தும் ஏல முறையில் தான் நடைபெறும் என்றும், ஏலம் முடிவுக்கு வந்த பின்பு தான் காண்ட்ராக்டர் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகின்ற 28ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு வழங்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த ஊழல்கள் முறையாக, எந்த தயக்கமும் இன்றி விசாரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடுகள் தீவிரம்
சட்டமன்ற தேர்தலின் போது ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் படி, மக்களுக்கு இலவச நிலம் அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கு வருடப் பிறப்பு முன்பாக, அரசு நிலங்கள் அணைத்தும் சர்வே செய்யப்பட்டு வருகிறது. ஜி.பி.எஸ் மற்றும் சேட்டிலைட் இமேஜ்கள் ஆகியவை கொண்டு இந்த நிலங்கள் அளக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.