scorecardresearch

இந்த ஆண்டும் முதலிடம் பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி… இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்!

இந்தியாவில் உள்ள 30 முதல்வர்களில், 29 பேர் (97 சதவீதம்) கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஒவ்வொரு முதல்வரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.33.96 கோடி ஆக உள்ளது.

Jagan Mohan Reddy wealthiest CM, Mamata Banerjee least well-off: ADR report Tamil News
Out of the 30 CMs analysed, 29 (97 per cent) are crorepatis with the average assets being Rs 33.96 crore for every CM, the ADR said.

29 of current 30 CM’s are crorepatis ADR Analysis Tamil News: நாட்டில் தற்போதுள்ள 30 முதல்வர்களில் 27 பேர் கோடீஸ்வர முதல்வர்களாக உள்ளனர். இதில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகபட்சமாக ரூ. 510 கோடி சொத்துக்களைக் கொண்டுள்ளனர் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்த கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தற்போதைய 30 முதலமைச்சர்களின் சுயமாகப் பதவியேற்ற தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ஏடிஆர் மற்றும் தேர்தல் கண்காணிப்பகம் (NEW) தெரிவித்துள்ளன.

28 மாநில முதல்வர்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களான டெல்லி மற்றும் புதுச்சேரியில் முதல்வர்களும் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது முதல்வர் இல்லை.

பகுப்பாய்வு செய்யப்பட்ட 30 முதல்வர்களில், 29 பேர் (97 சதவீதம்) கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஒவ்வொரு முதல்வரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.33.96 கோடி என்று ஏடிஆர் தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 30 முதல்வர்களில் 13 பேர் (43 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளும், ஐந்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையுடன் கூடிய ஜாமீனில் வெளிவர முடியாத குற்ற வழக்குகளும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏடிஆர் படி, சொத்துக்களின் அடிப்படையில் முதல் மூன்று முதல்வர்கள் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி (ரூ. 510 கோடி), அருணாச்சலப் பிரதேசத்தின் பெமா காண்டு (ரூ. 163 கோடிக்கு மேல்) மற்றும் ஒடிசாவின் நவீன் பட்நாயக் (ரூ. 63 கோடிக்கு மேல்) உள்ளனர்.

மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி (ரூ. 15 லட்சத்திற்கு மேல்), கேரளாவின் பினராயி விஜயன் (ரூ. 1 கோடிக்கு மேல்) மற்றும் ஹரியானாவின் மனோகர் லால் (ரூ. 1 கோடிக்கு மேல்) ஆகிய மூன்று முதல்வர்கள் குறைந்த சொத்துக்களை கொண்டவர்களாகவும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவருக்குமே 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு ஏடிஆர் அறிக்கையில், ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.373 கோடியாக இருந்தது. அவரது குடும்ப சொத்துக்கள் மற்றும் அவர் வாங்கிய சொத்துக்கள் உட்பட 2022 ஆம் ஆண்டில் நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது இந்த ஆண்டும் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

குற்ற வழக்குகளை பொறுத்தவரையில், தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) மீது 37 தீவிர வழக்குகள் உட்பட 64 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் தெரிவித்துள்ளது. கே.சி.ஆருக்கு அடுத்தபடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் மீது 10 கடுமையான குற்றங்கள் உட்பட நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 47 ஆக உள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Jagan mohan reddy wealthiest cm mamata banerjee least well off adr report tamil news