/indian-express-tamil/media/media_files/2025/06/16/kAluA5NnufJJyxwWJbgW.jpg)
அரசு முறை பயணமாக மூன்று நாட்கள் புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இன்று (ஜூன் 16) பிற்பகல் ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது, ஜெகதீப் தன்கர் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில், 'பீப்' ஒலி கேட்டது. உடனடியாக தனது உரையை நிறுத்திய ஜெகதீப் தன்கர், "இந்த ஒலி எனக்காகவா?" என்று வேடிக்கையாக கேட்டார்.
மேடையில் இருந்த ஜிப்மர் மருத்துவமனையின் ஊழியர் ஒருவர், "இந்த ஒலி உங்களுக்கு அல்ல. இது ஃபயர் அலாரம். விழா தொடங்குவதற்கு முன் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. அப்பொழுது அதிலிருந்து வெளியேறிய புகை, இந்த ஃபயர் அலாரத்தை ஏற்படுத்தியது" என்று விளக்கமளித்தார். இந்தச் சம்பவம் காரணமாக கருத்தரங்கில் சிறிது நேரம் சிரிப்பொலி எழுந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.