Advertisment

மும்பை ரயில் கொலை: ரயில்வே போலீஸ் பணி நீக்கம்; அவர் மீது 6 ஆண்டுகளுக்கு முன்பே மற்றொரு ‘வெறுப்பு வழக்கு’

ஜெய்ப்பூர்- மும்பை ரயில் கொலை: ரயில்வே போலீஸ் பணியிடை நீக்கம்; 6 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு ‘வெறுப்பு வழக்கில்’ விசாரணையை எதிர்கொண்டது தெரியவந்துள்ளது

author-image
WebDesk
New Update
Chettan singh

ஜூலை 31 அன்று ரயிலுக்குள் நான்கு பேரை சுட்டுக் கொன்றதற்காக சேத்தன்சிங் சவுத்ரி கைது செய்யப்பட்டார். (கோப்புப் படம்/ANI)

Vijay Kumar Yadav

Advertisment

ஜூலை 31 அன்று ஜெய்ப்பூர்- மும்பை சென்ட்ரல் அதிவிரைவு விரைவு ரயிலில் மூத்த சக ஊழியரான ஏ.எஸ்.ஐ மற்றும் மூன்று பயணிகளை சுட்டுக் கொன்ற ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சேத்தன்சிங் சவுத்ரி, பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சேத்தன்சிங் சவுத்ரியை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவை ஆகஸ்ட் 14 அன்று மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எஃப் மூத்த பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்: மும்பை ரயில் கொலை: பர்தா அணிந்த பெண்ணை துப்பாக்கி முனையில் ‘ஜெய் மாதா தி’ என்று சொல்ல மிரட்டிய RPF கான்ஸ்டபிள்

ஆர்.பி.எஃப் ஏ.எஸ்.ஐ திகாரம் மீனா மற்றும் பயணிகளான அப்துல் காதர் முகமது ஹுசைன் பன்புராவாலா, சையத் சைபுதீன் மற்றும் அஸ்கர் அப்பாஸ் ஷேக் ஆகியோரை சுட்டுக் கொன்ற சேத்தன்சிங் சவுத்ரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்தநிலையில், சேத்தன்சிங் சவுத்ரி RPF பணியில் இருக்கும்போது ஒரு முஸ்லீம் நபரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் "வெறுப்பு வழக்கு" உட்பட குறைந்தது மூன்று சம்பவங்களில் ஈடுபட்டதற்கான கடந்தகால சேவைப் பதிவு அவருக்கு உள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது.

மூன்று சம்பவங்களிலும் விசாரணைகளை அடுத்து அவர் துறை ரீதியான நடவடிக்கையை எதிர்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைப் பற்றி கேட்டதற்கு, மேற்கு ரயில்வேயின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் பி.சி சின்ஹா, விசாரணை நடந்து வருவதாகக் கூறி, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

2017 ஆம் ஆண்டு உஜ்ஜயினியில் RPF நாய்ப் படையில் சேத்தன்சிங் சவுத்ரி நியமிக்கப்பட்டபோது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணையை நன்கு அறிந்த ஒரு ஆதாரம் கூறியது.

“பிப்ரவரி 18, 2017 அன்று, சேத்தன்சிங் சவுத்ரி பணியிலிருந்து விலகி, சிவில் உடையில் இருந்தபோது, ​​அவர் வாஹித் கான் என்ற நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, எந்த காரணமும் இல்லாமல் அவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றி அவரது உயர் அதிகாரிகள் அறிந்ததும், அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டனர், பின்னர் அவர் இந்த செயலுக்காக தண்டிக்கப்பட்டார்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

2011 ஆம் ஆண்டுக்கு முந்தைய மற்றொரு சம்பவத்தில், ஹரியானாவில் உள்ள ஜகத்ரியில் பணியமர்த்தப்பட்டபோது, ​​சக ஊழியரின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி சேத்தன்சிங் சவுத்ரி ரூ.25,000 எடுத்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, விசாரணை தொடங்கப்பட்டது.

மூன்றாவது சம்பவத்தில், அவர் குஜராத்தில் உள்ள பாவ்நகரில் பணியமர்த்தப்பட்டபோது சக ஊழியரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது, துறை ரீதியான விசாரணையைத் தொடர்ந்து சேத்தன்சிங் சவுத்ரி வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

ஜூலை 31 சம்பவம் தொடர்பாக RPF விசாரணைக் குழு, சேத்தன்சிங் சவுத்ரியின் சக ஊழியர்கள் மற்றும் மூத்தவர்களிடம், தற்போதைய மற்றும் முன்னாள் வழக்குகள் தொடர்பாக, அவரது நடத்தை மற்றும் சேவையின் போது நடத்தையை பகுப்பாய்வு செய்ய ஏற்கனவே அறிக்கைகளை பதிவு செய்துள்ளது.

புதன் கிழமை, ரயில் கொலைகளை விசாரிக்கும் புலனாய்வாளர்களிடம், பர்தா அணிந்த பெண் பயணியை சேத்தன்சிங் சவுத்ரி மிரட்டியதாகவும், துப்பாக்கி முனையில் ‘ஜெய் மாதா தி’ என்று சொல்லும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் அரசு ரயில்வே காவல்துறை, போரிவலி, அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்தப் பெண் முக்கிய சாட்சியாக ஆக்கப்பட்டுள்ளார். இந்த முழு காட்சியும் ரயிலில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Mumbai Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment