Hamza Khan
Jaipur Oyo’s SilverKey hotels denied room to interfaith couple : ராஜஸ்தானின் ஜெய்பூரில் அமைந்திருக்கிறது ஓயோவின் சில்வர்கீ ஹோட்டல். அங்கு தங்குவதற்காக செயலி ஒன்றின் மூலம் ரூம்கள் புக் செய்திருக்கிறார் 31 வயது மதிக்கத்தக்க இஸ்லாமிய உதவிப் பேராசிரியர். அவர் உதய்பூரை சேர்ந்தவர். சனிக்கிழமை (05/10/2019) காலை அந்த ஹோட்டலை அடைந்த அந்த நபர், தன்னுடைய தோழி டெல்லியில் இருந்து வருவதற்கு சற்று நேரமாகும் என்று கூறி தான் புக் செய்திருந்த ரூம் குறித்து விசாரித்தார்.
அங்கிருந்த ரிசப்சனிஸ்ட், உங்களுடன் தங்க இருக்கும் நபர் யார் என்று கேள்வி எழுப்ப, நான் என் தோழியின் பெயரைக் கூறினேன். உடனே ரிசப்சனிஸ்ட் “மன்னிக்க வேண்டும் சார். உங்களுக்கு இங்கே இடம் அளிக்க முடியாது. வெவ்வேறு மதங்களை சேர்ந்த உங்கள் இருவரையும் உள்ளே அனுமதிக்க இயலாது” என்று கூறியுள்ளார்.
இது குறித்து செயலியிலோ உங்கள் ஹோட்டலின் இணைய தளத்திலோ எதுவும் மேற்கோள் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பிய போது, இது உள்ளூர் காவலர்களின் உத்தரவு என்றும் அதன்படிதான் நாங்கள் நடந்து கொள்கிறோம் என்றும் ஹோட்டல் தரப்பு அறிவித்துள்ளது. இதனை நீங்கள் எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்ட போது, அதற்கு ஹோட்டல் தரப்பு மறுத்துவிட்டது. இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறிய போதும் அவர்கள் அதனை காதில் போட்டுக் கொள்ளவில்லை.
இது குறித்து முறையாக அந்த ஹோட்டல் செயலியில் புகாரினை பதிவு செய்திருக்கிறார் அந்த உதவி பேராசிரியர். அதற்கு மாற்றாக, அவர் கட்டிய பணத்திற்கு நிகராக மற்றொரு ஹோட்டலை மேற்கோள் காட்டியுள்ளனர் அந்நிறுவனத்தினர். அந்த ஹோட்டல் அறைகளோ முறையாக மேற்பார்வையிடமால் தங்குவதற்கு தகுதியற்றதாக இருந்ததாக அறிவித்துள்ளார் அந்த உதவிப் பேராசிரியர்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
இது குறித்து பேராசியரின் தோழியிடம் கேட்ட போது, இருவர் ஒரே மதத்தை சேர்ந்திருக்காமல் இருந்தால், ஒரே பாலினத்தவர்களாக இல்லாமல் இருந்தால் அவர்களை ஹோட்டலுக்குள் அனுமதிக்க மறுப்பதா? 21ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு சீக்கியர் - ஒரு இந்து என்றால் அனுமதி உண்டு. ஒரு முஸ்லீம் - ஒரு இந்து என்றால் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார்.
ஹோட்டல் மேனஜர் தரப்பு விளக்கம்
சனிக்கிழமை காலையில் நடைபெற்ற சம்பவத்தை ஒப்புக் கொண்டனர் ஹோட்டல் தரப்பினர். அந்த ஹோட்டலின் மேலாளர் கோவர்தன் சிங் கூறுகையில் “அந்த விதிமுறைகள் யாவும் உள்ளூர் காவல்துறையின் அறிவுறுத்தலின் பெயரில் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் வாய்மொழி வார்த்தையாக இந்த விதிமுறைகளை கடைபிடிக்க கூறினார்கள். அதைத்தான் நாங்கள் அந்த உதவி பேராசிரியரிடம் கூறினோம். காவல்தரப்பில் இருந்து எழுத்துவடிவ உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை” என்றும் கூறினர்.
காவல்துறையின் அறிவிப்பு
ஜெய்ப்பூர் காவல் ஆணையிஅர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “காவல்துறை தரப்பில் இருந்து இது போன்ற ஒரு உத்தரவு வார்த்தையாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பிறப்பிக்கப்படவில்லை. ஹோட்டல் தரப்பினர் காவல்துறையினர் பெயரைக் கூறி ஏமாற்றுகின்றார்கள்”என்று கூறியுள்ளார்.
ஓயோ நிறுவனம் தரப்பு விளக்கம்
ஓயோ ஹோட்டல் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி “நாங்கள் அந்த மேலாளரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்கிறோம். இது போன்ற நிகழ்வுக்கு நாங்கள் வருந்துகின்றோம். மேலும் எங்கள் ஹோட்டலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாகவே நடத்துவோம். அவர்களின் இனம், நிறம், மதம், தேசியம், பாலியல் தேர்வுகள், திருமண உறவுகள், பாலினம், வயது ஆகியவற்றால் பாகுப்பாட்டினை காட்டாமல் வரவேற்போம். எந்த வகையான தீண்டாமையையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : 2 பெண்கள் சேர்ந்து நடனமாடக் கூடாதா? பௌன்சர்கள் வைத்து வெளியேற்றிய பிரபல ஹோட்டல்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.