Jaish-e-Mohammed chief Masood Azhar : ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் முயற்சி செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நான்காவது முறையா மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதில் சீனா முட்டுக்கட்டையாக செயல்பட்டுள்ளது.
பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா பகுதியில், ராணுவ வீரர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு. அதில் 40 வீரர்கள் கொல்லபட்டனர்.
Jaish-e-Mohammed chief Masood Azhar
ஐ.நா. கொண்டு வர இருந்த தீர்மானத்திற்கு இன்று காலை 12.30 மணி வரை காலக்கெடு விதித்திருந்த நிலையில், சீனா தன்னுடைய முடிவினை அறிவித்திருந்தது. மசூத் அசார் பற்றிய நிலைப்பாட்டினை அவ்வளவு எளிதாக கூறிவிட இயலாது என்பதால் அந்த முடிவினை அறிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் அடுத்த 6 மாதங்களுக்கு சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கபடுவோர் பட்டியலில் மட்டுமே அசார் நிறுத்தி வைக்கப்படுவார். பாகிஸ்தானின் கூட்டாளி, சகோதரத்துவ நாடு என்று நம்பப்படும் சீனா, அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, மற்றும் இந்தியாவின் தொடர் அழுத்தங்களை கடந்தும் இந்த முடிவினை எடுத்துள்ளது.
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மேற்கூறிய நாடுகள் தவிர போலாந்து, பெல்ஜியம், இத்தாலி, வங்காளதேசம், மாலத்தீவுகள், பூடான், கய்னா, ஜப்பான், மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் வரவேற்றுள்ளன. சில நாடுகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்கள் இல்லை என்றாலும் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான சயத் அக்பரூதீன் தன்னுடைய ட்வீட்டில் “சில நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தன. ஆனாலும் மீண்டும் சீனா தங்களின் நிலைப்பாட்டை நிறுத்தி வைத்திருக்கின்றது. ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவாரா மசூத் அசார் ?
நன்றி கூறிய இந்தியா
வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சான்க்சன் கமிட்டி 1267 கொடுத்த காலக்கோட்டிற்குள், முகமது மசூத் அசார் அல்வியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. கமிட்டியில் இருக்கும் ஒரு உறுப்பு நாடு, இந்த தீர்மானத்தை தற்போது நிறுத்தி வைத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சீனா தான் அந்த நாடு என்பதை அதில் தெரியப்படுத்தவில்லை.
இதனால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருக்கிறோம். பிப்ரவரி மாதம் 14ம் தேதி புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச அமைப்பினால் இயலாமல் போனது. ஆனால் எங்களின் கோரிக்கைக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைத்து உறுப்பு நாடுகளுக்கும், பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் உறுப்பு நாடுகளுக்கும் நன்றி என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேறேனும் வழிமுறைகள் இருந்தால் அதனை நிச்சயமாக பயன்படுத்தி தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவோம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாலகோட் தாக்குதல் நடைபெற்ற உடனே வெளியுறவுத் துறை அமைச்சர் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்து, வெளியுறவுத் துறை கவுன்சிலர் வாங் யியை சந்தித்து பேசினார். அந்த பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் பிரதமர் அவ்வளவு நல்லவராக இருந்தால் அவர் நிச்சயமாக மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அப்படி அவர் செய்தால் பாகிஸ்தானுடன் நல்ல உறவு முறை பேணப்படும் என்றும் அவர் கூறினார் சுஷ்மா ஸ்வராஜ்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், ஜெ.இ.எம்ற்கு ஆதரவாக, பாகிஸ்தான் ராணுவம் ஏன் நம்முடன் தாக்குதல் நடத்த வேண்டும். அவர்கள் மண்ணில் தீவிரவாத இயக்கத்தை வளர்க்கமட்டும் இல்லை. மாறாக அவர்களுக்கு தேவையான பண உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.