Advertisment

இந்தியா மீது குற்றச்சாட்டு வைக்கும் பாக்,.: 'கொல்லைப்புறத்தில் பாம்பு' கருத்தை எழுப்பிய ஜெய்சங்கர்!

"உங்கள் கொல்லைப்புறத்தில் பாம்புகளை வைத்துக் கொண்டு, அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது." என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டதை அமைச்சர் ஜெய்சங்கர் நினைவு கூர்ந்தார்.

author-image
WebDesk
New Update
Jaishankar evokes Hillary Clinton’s ‘snake in the backyard’ comment Tamil News

External Affairs Minister S. Jaishankar

Jaishankar on Pakistan at UNSC Tamil News: நேற்று முன்தினம் புதன்கிழமை (டிசம்பர் 14 ஆம்) இஸ்லாமாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதத்தின் மீது உலகின் கவனத்தை ஈர்த்து விளையாடுவதற்கும், பாதிக்கப்பட்ட நபராக விளையாடுவதற்கும், இந்தியாவை விட எந்த நாடும் சிறந்த முறையில் பயனடையவில்லை என்றும், 'இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை' என்றும் கூறியிருந்தார்.

Advertisment
publive-image

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹினா ரப்பானி கர்-க்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கிறது' என்றும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இருந்த போதும், பயங்கரவாத அச்சுறுத்தல் எங்கிருந்து வருகிறது என்பதை சர்வதேச சமூகம் மறந்துவிடவில்லை' என்றும் வலியுறுத்தினார்.

நேற்று வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறை: சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி’ என்ற தலைப்பில் இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்டார். பின்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: இந்தியா மீது குற்றச்சாட்டு வைக்கும் பாக்,.: ‘கொல்லைப்புறத்தில் பாம்பு’ கருத்தை எழுப்பிய ஜெய்சங்கர்!

"அவர்கள் சொல்வதைப் பொறுத்தவரை, உண்மை என்னவென்றால், இன்று உலகம், பயங்கரவாதத்தின் மையமாக அவர்களைப் பார்க்கிறது. நமது நாடு இரண்டரை வருடங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது என்பது எனக்குத் தெரியும். இதன் விளைவாக நம்மில் பலருக்கு மூளை மூடுபனி உள்ளது. ஆனால், பயங்கரவாதம் எங்கிருந்து வெளிப்படுகிறது, பிராந்தியத்திலும், பிராந்தியத்திற்கு அப்பாலும் பல நடவடிக்கைகளில் தங்கள் கைரேகைகளை வைத்திருக்கும் பாகிஸ்தானை உலகம் மறக்கவில்லை என்று நான் உறுதியளிக்கிறேன்.

எனவே, அவர்கள் செய்யும் கற்பனைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்கள் தங்களை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று என்று நான் கூறுவேன்." என்றார்.

கடந்த 2011ல் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் உடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்த அமைச்சர் ஜெய்சங்கர், "உங்கள் கொல்லைப்புறத்தில் பாம்புகளை வைத்து, அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது." என்று கூறினார்.

publive-image

“அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியது குறித்த அறிக்கைகளைப் படித்தேன். ஒரு தசாப்தத்திற்கு முன்னர், என் நினைவு எனக்குச் சரியாகச் செயல்படுகிறது என்பதை நான் நினைவுபடுத்தினேன். ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு வந்தார். ஹினா ரப்பானி கர் அந்த நேரத்தில் அமைச்சராக இருந்தார்.

அவருக்கு அருகில் நின்ற ஹிலாரி கிளிண்டன் 'உங்கள் கொல்லைப்புறத்தில் பாம்புகள் இருந்தால், அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டும் கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. கடைசியில் கொல்லைப்புறத்தில் வைத்திருப்பவர்களையும் கடித்துக் குதறும்' என்று கூறினார். ஆனால் உங்களுக்கு தெரியும், கடந்த காலங்களில் பாகிஸ்தான் நல்ல ஆலோசனைகளை எடுப்பதில் சிறந்து விளங்கவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்." என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் தனது செயலைச் சுத்தப்படுத்தி, நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சிக்க வேண்டும், உலகம் "முட்டாள்" அல்ல என்று அடிக்கோடிட்டுக் காட்டிய ஜெய்சங்கர், பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகள், அமைப்புகள் மற்றும் மக்களை அதிகளவில் அழைக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இந்தியா மீது குற்றச்சாட்டு வைக்கும் பாக்,.: ‘கொல்லைப்புறத்தில் பாம்பு’ கருத்தை எழுப்பிய ஜெய்சங்கர்!

"இறுதியில், உலகம் முட்டாள் அல்ல, உலகம் மறப்பதில்லை. மேலும் பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் மற்றும் மக்களை உலகம் அதிகளவில் அழைக்கிறது.

அந்த விவாதத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம், நீங்கள் அதை மறைக்கப் போவதில்லை. நீங்கள் இனி யாரையும் குழப்ப மாட்டீர்கள். மக்கள் அதை கண்டுபிடித்துள்ளனர். எனவே எனது அறிவுரை, தயவுசெய்து உங்கள் செயலை சுத்தம் செய்யுங்கள். தயவுசெய்து நல்ல அண்டை வீட்டாராக இருக்க முயற்சி செய்யுங்கள்.

தயவுசெய்து, உலகின் பிற நாடுகள் இன்று என்ன செய்ய முயல்கின்றன என்பதை உற்று நோக்குங்கள். அதாவது பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கத்தல்." என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Pakistan S Jaishankar Terrorism
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment