இலங்கைக்கு இருதரப்பு சந்திப்புக்காகவும், BIMSTEC மாநாட்டிற்காகவும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்தார். அப்போது, அங்கிருக்கு உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அறுவை சிகிச்சைக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அங்கிருக்கும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம், கோபால் பாக்லேவை மருத்துவமனை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பதை கேட்டறியுமாறு அறிவுறுத்தினார்.
ஜெய்சங்கர் தனது ஆரம்பகால ராஜதந்திர வாழ்க்கையில் இருந்து இலங்கையுடன் தனிப்பட்ட தொடர்பைக் கொண்டிருந்தார்.1988 முதல் 1990 வரை, அவர் இந்திய தூதரகத்தின் முதல் செயலாளராக இலங்கையில் பணியாற்றினார். இதுதவிர, இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) அரசியல் ஆலோசகராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினர்கள்
இந்தியத் தலைமை நீதிபதி என் வி ரமணா அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு, சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர். பத்ம பூஷன் விருது பெற்றவர்களும், கோவாக்சின் தயாரிப்பாளர்கள் பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லாவும், துணை தலைவர் டி சுசித்ரா எல்லாவும் வந்திருந்தனர்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி, Covaxin தடுப்பூசி உலகம் முழுவதும், குறிப்பாக வளரும் நாடுகளில் பலரது உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். இந்தியாவுக்கு நற்பெயரை கொண்டு வந்த அவர்களை பாராட்டினார். சுசித்ரா எல்லாலாவின் கூட்டாண்மை இல்லாமல் இதையெல்லாம் சாதித்திருக்க முடியாது எனக் கூறிய என்வி ரமணா, நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு இது ஒரு உத்வேகமான கதை என்றார்.
தொடர்ந்து, மூன்று முன்னாள் முதல்வர்களான என்.டி.ராமராவ், எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோருடன் இணைந்து நடித்த பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை சௌகார் ஜானகி மற்றும் நாட்டுப்புறக் கலைஞர் சாகினி ராமச்சந்திரய்யா ஆகியோரையும் தலைமை நீதிபதி பாராட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil