இந்திய-அமெரிக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்காவின் நாடாளுமன்ற பெண் எ.பி. பிரமிளா ஜெயபால் அறிமுகப்படுத்திய காஷ்மீர் தொடர்பான காங்கிரஸின் தீர்மானம் ஜம்மு-காஷ்மீரின் நிலைமைக்கு நியாயமானதாக இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார். பிரமிளா ஜெயபாலையும், அந்நாட்டு எ.பி.களையும் சந்திப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர்களுக்கு திறந்த மனமோ அல்லது வெளிப்படையாக விவாதிப்பதற்கோ தயாராக இல்லை என்றும் ஏற்கேனவே அவர்களுடைய மனதை முடிவு செய்துவைத்திருக்கிறார்கள்.” என்று ஜெய்சங்கர் கூறினார்.
“இந்த (காங்கிரஸின்) தீர்மானத்தை நான் அறிவேன். இது ஜம்மு-காஷ்மீரின் நிலைமையைப் பற்றிய நியாயமான புரிதல் என்று நான் நினைக்கவில்லை. அல்லது, இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நியாயமான முறையில் சித்தரிக்கிறது என்று நான் கருதவில்லை. ஜெயபாலை சந்திப்பதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை.” ஜெய்சங்கர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஜெய்சங்கர் வாஷிங்டன் டிசியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மைக்கெ பாம்பியோவும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரும் 2+2 பிரதிநிதிகள் என்ற வகையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
54 வயதான பிரமிளா ஜெயபாலை கூட்டத்தில் இருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்ததையடுத்து, இந்த வாரம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களுடனான சந்திப்பை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திடீரென ரத்து செய்ததாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவித்துள்ளது.
ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுக் குழுவின் தலைவரான காங்கிரஸ்காரர் எலியட் எல் ஏங்கல், குழுவின் உயர்மட்ட குடியரசுக் கட்சியின் மைக்கேல் மெக்கால் மற்றும் ஜெயபால் உட்பட மற்றவர்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.
“இது எந்தவொரு எதிர்ப்பையும் இந்திய அரசு கேட்க விரும்பவில்லை என்ற கருத்தை மட்டுமே மேலும் விரிவுபடுத்துகிறது. இந்த தருணத்தின் தீவிரத்தன்மை ஒரு உரையாடலுக்கு காரணமாக இருக்க வேண்டும். கூட்டத்தில் யார் இருக்கவேண்டும் என்பதைக் உத்தரவிடக்கூடாது. இது மிகவும் சில்லியாகத் தெரிகிறது” என்று பிரமிளா ஜெயபால் கூறியதாக தி வாஷிங்டன் போஸ்ட் மேற்கோள் காட்டியுள்ளது.
சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பெண் ஆவார். பல வார முயற்சிகளுக்குப் பிறகு இந்த மாத தொடக்கத்தில் காஷ்மீர் குறித்த தீர்மானத்தை அவர் சபையில் அறிமுகப்படுத்தினார்.
இந்த தீர்மானத்தில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி 370 வது பிரிவு திருத்தப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட தகவல் தொடர்பு தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பிரமிளா ஜெயபால் வலியுறுத்தினார். முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் மத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானம் வலியுறுத்தியது.
இந்தியாவின் நிலைமையை விமர்சிக்கும் அமெரிக்க அவையின் வெளியுறவு குழுவின் தீர்மானத்தை கடுமையாக கருதுகிறீர்களா ஜெய்சங்கரிடம் கேட்டபோது, அவர், “வெளிப்படையான திறந்த விவாதத்திற்கான மக்களை சந்திப்பதில் எனக்கு ஆர்வம் உள்ளது. ஆனால், ஏற்கனவேம் அவர்களின் மனதில் முன்முடிவுகளை உருவாக்கி வைதிருப்பவர்களுடன் ஆர்வம் இல்லை.” என்று கூறினார்.
இந்தியா-அமெரிக்கா நாடுகளின் 2 + 2 பிரதிநிதிகளின் உரையாடலில் கலந்து கொள்வதற்காக ஜெய்சங்கர் வாஷிங்டன் டி.சி.யில் இருந்தார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் பாம்பியோவும் பாதுகாப்பு செயலாளர் எஸ்பர் ஆகியோரும் தங்கள் இந்திய நண்பர்களான ஜெய்சங்கருடனும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் இரண்டாவது 2 + 2 அமைச்சர்களின் உரையாடலை தொடங்கினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.