தாவ் தயால் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உ.பி.யின் ஜலேசர் பகுதிகளில் கோவில் மணிகளை செய்து வருகின்றார். வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு அளவுகளில் மணி செய்து வரும் அவருக்கு அதிர்ச்சி தரும் ஒரு ஆர்டர் வந்தது என்று தான் கூற வேண்டும். அயோத்தியில் உருவாக்கப்படும் ராமர் கோவிலுக்காக 2100 கிலோகிராம் எடையில் மணி ஒன்றை உருவாக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த மணியை வடிவமைத்துக் கொடுத்தவர் ஒரு இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது. .அவருடைய பெயர் இக்பால் மிஸ்த்ரி. வடிவமைப்பு, கலவை மற்றும் மெருகூட்டுதல் போன்றவற்றில் தனித்திறன் கொண்டவர்கள் என்கிறார் தயால்.
மேலும் படிக்க : இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? – ஸ்டாலின் கேள்வி
தயாலும் இக்பாலும் இணைந்து உருவாக்கிய மிகப்பெரிய மணி இதுவாகும். நான்காம் தலைமுறையாக மணி தயாரிக்கும் இவர் இது குறித்து கூறுகையில் “இது மிகவும் கடினமானது. ஒரு மாதத்திற்கும் மேலாக இதனை செய்ய காலம் தேவைப்படும். எந்த ஒரு தவறும் நிகழ்ந்துவிட கூடாது என்பதை மனதில் கொண்டு தான் இதனை உருவாக்கினோம். அதே நேரத்தில் தவறு ஏதேனும் நேர்ந்துவிட்டால் என்ன ஆகும் என்பதையும் மனதில் கொண்டு இதனை உருவாக்கினோம். உருக்கிய கலவையை சரியான நேரத்தில் ஊற்றவிட்டாலும் கூட அது பிரச்சனையாகிவிடும் என்றும் கூறுகிறார் இக்பால்.
அஷ்டதாது என 8 உலோகங்கள் கொண்டு இது உருவாக்கப்பட்டது. தங்கம், சில்வர், காப்பர், தாமிரம், டின், இரும்பு, பாதரசம், சிங்க் கொண்டு இது உருவாக்கப்பட்டது. 2100 கிலோ எடையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோவில் மணியோசை 15 கி.மீ அப்பாலும் கேட்குமாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil