CAA Protest: ஜாமியாவில் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்த இடத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததாக வெளியான தகவலை அடுத்து, நேற்று போலீஸார் அங்கு விரைந்தனர். அங்கு துப்பாக்கி சூடு நடந்ததாக ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு (ஜே.சி.சி) கூறிய நிலையில், கூடுதல் டி.சி.பி குமார் ஞானேஷ், புகாரின் அடிப்படையில் போலிசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறார்கள், "விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது" என்றார்.
கரண்ட் பில், ஜிம் ஃபீஸ் மிச்சம்; மாவரைக்கும் சைக்கிள் கிரைண்டர்; வைரல் வீடியோ
தென்கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள் (எஸ்.எச்.ஓ) மற்றும் அவர்களது ஊழியர்கள் ஜாமியாவை அடையுமாறு கேட்டுக்கொண்ட செய்தி டி.சி.பி சார்பில் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாலை 12.20 மணிக்கு பறந்தது.
ஜே.சி.சியின் படி, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஜாமியாவின் வாயில் எண் 5-ல் வெளியே இருந்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சிவப்பு ஜாக்கெட் அணிந்திருந்ததாகவும், சிவப்பு ஸ்கூட்டரில் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு பேரும் ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து வந்தனர். அதிலிருந்து இறங்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர்கள் எந்த முழக்கங்களையும் எழுப்பவில்லை ”என்று ஜாமியாவில் தொலைக்காட்சி இதழியல் படிக்கும் மொஹமட் பிரபுல் (25) கூறினார்.
நிஜ பாக்ஸராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்: விறுவிறு வீடியோ
பட்டப்படிப்பைத் தொடரும் பைசான், “நள்ளிரவில், இரண்டு பேர் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது நடந்தபோது நான் 20 மீட்டர் தொலைவில் இருந்தேன்” என்றார். அதோடு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி ஜாமியா காவல் நிலையத்திற்கு வெளியே கூட்டம் கூடியிருந்தது. அப்போது ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, “இந்த விவகாரம் அறிவிக்கப்பட்டவுடன், எஸ்.எச்.ஓ அங்கு விரைந்தார். அவர் இதுவரை அங்கு எதையும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் நாங்கள் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில், இதனை பரிசீலித்து இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம்” என்றார்.