எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சலைக்காமல் அதிரடியாகவும் சில நேரங்களில் நிதானமாகவும் கவுண்ட்டர் கொடுத்துவரும் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பாக்ஸிங் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பாக்ஸராக மாறி பாக்ஸிங் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக மீன்வளவத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எதிர்க்கட்சிகளின் அத்தனை விமர்சனங்களுக்கும் ஊடகங்களின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கும் சளைக்காமல் அதிரடியாகவும் சில நேரங்களில் நிதானமாகவும் கவுண்ட்டர் பதில்களைக் கொடுப்பதில் முதன்மையான அமைச்சர் என்றால் அது மிகையல்ல.
அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் என்ற அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும் கலகலப்பாக பேசக் கூடியவர். தேர்தல் பிரசாரங்களில் பாடல் பாடி பிரசாரம் செய்து மக்களை ஈர்ப்பார். இப்படி எங்கு சென்றாலும் அமைச்சர் ஜெயக்குமார் மக்களை எப்படியாவது கவர்ந்துவிடுவார்.
இன்று சென்னையில் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் நேரு விளாயாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பாக்ஸிங் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், பாக்ஸிங் கிளவுஸ்களை மாட்டிக்கொண்டு பாக்ஸர்களுடன் ஜாலியாக பாக்ஸிங் செய்து அங்கே இருந்த அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.