Jammu And Kashmir | Election Commission | Article 370: கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதனை எதிரத்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொது நலவழக்குகள் தொடரப்பட்ட நிலையில், நேற்று திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.
'ஜம்மு காஷ்மீரில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். மாநில அந்தஸ்தை விரைவாக கொடுக்க வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும்' என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Article 370 abrogation: Delimitation to booths, all processes in place for polls
இந்நிலையில், தொகுதிகளை வரையறுப்பது முதல் வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கம் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகளை "மறுசீரமைத்தல்" வரை, ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து "முழுமையாக" உள்ளன.
இது தொடர்பாக கடந்த ஜனவரி 19-ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேசுகையில், எல்லை நிர்ணயம் செய்யும் பணி முடிந்துவிட்டது. சிறப்பு சுருக்க திருத்தம் (SSR) செயல்முறை முடிந்தது. எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு வாக்களிப்பு பூத்களை அடையாளம் காணுதல், நிர்ணயம் செய்தல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம், எரோக்கள் (உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள்) நியமனம் மற்றும் முழு செயல்முறையும் முடிந்தது. எனவே, செயல்முறை முடிந்ததும், தேர்தல் வரவுள்ளது. அவை நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்.
தேர்தல் தேதிகளை தீர்மானிப்பதற்கு முன் வானிலை, பாதுகாப்புக் கவலைகள் மற்றும் பிற தேர்தல்களை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளும்" என்று அவர் கூறியிருந்தார்.
இதன்பின்னர் அக்டோபர் 9 அன்று, 5 மாநிலங்களுக்கான தேர்தல்களை அறிவிக்கும் போது, ஜம்மு காஷ்மீரில் தேர்தல் எப்போது நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் மீண்டும் கேட்கப்பட்டது. தேர்தல்கள் "பொருத்தமான" நேரத்தில் நடத்துவோம்" என்று அவர் பதிலளித்தார்.
உச்ச நீதிமன்றம் தற்போது செப்டம்பர் 30, 2024 வரை தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுடன் அல்லது அந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம். பொதுவாக ஜம்மு காஷ்மீரில் குளிர்காலம் என்பதால், நவம்பர் முதல் மார்ச் இறுதி வரை தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை.
புதிய யூனியன் பிரதேசத்தின் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மே 2022 இல் நிறைவடைந்தது. அதன்பிறகு, புதிய தொகுதிகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது, முதலில் நவம்பர் 2022 மற்றும் பின்னர் இந்த ஆண்டும் திருத்தப்பட்டது. இப்போது, முழு நாட்டின் வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரின் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜனவரி 5, 2024 அன்று வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் 2024 மக்களவைத் தேர்தலுக்கான மதிப்பாய்வைத் தொடங்கியுள்ளனர். அக்டோபர் 31 அன்று, ஜம்மு காஷ்மீர் உட்பட வடக்கு மண்டல அதிகாரிகளுடன் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மற்றொரு காரணியாக, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023-யை அரசாங்கம் ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருந்தாலும், அது டிசம்பர் 6 அன்று மக்களவையிலும், திங்களன்று ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. எல்லை நிர்ணய ஆணையம் பரிந்துரைத்தபடி, காஷ்மீர் புலம்பெயர்ந்தோரின் சமூகத்திலிருந்து இரண்டு உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு நியமனம் செய்ய எல்-ஜிக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது, அவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.