ஜம்மு காஷ்மீரின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (சிறைகள்) ஹேமந்த் குமார் லோஹியா திங்கள்கிழமை இரவு ஜம்மு நகரின், புறநகரில் உள்ள உதய்வாலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டுப் பணியாளர் தான், இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ளதாக போலீஸார் சந்தேகிக்கிப்பதாக, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீட்டு வேலை செய்பவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் தெரிவித்தார்.
57 வயதான லோஹியா, 1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. ஜம்முவின் புறநகரில் உள்ள உதய்வாலா இல்லத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் ஆகஸ்ட் மாதம் டிஜிபியாக (சிறைகள்) நியமிக்கப்பட்டார். குற்றம் நடந்த இடத்தை முதன்முதலில் ஆய்வு செய்ததில் இது சந்தேகத்திற்குரிய கொலையாகத் தெரியவந்தது என்று ஏடிஜிபி கூறினார். அதிகாரியின் வீட்டு உதவியாளர் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது, தடயவியல் மற்றும் குற்றவியல் குழுக்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தன என்று அவர் கூறினார். விசாரணை தொடங்கியுள்ளது. மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
முதலில் லோஹியாவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது அவரது உடல் தானா அல்லது வேறு யாருடையதா என்பது உடனடியாகத் தெரியவில்லை. பிறகுதான் கொலை செய்யப்பட்டது லோஹியா என்பது உறுதி செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“