ஜம்முவில் மீண்டும் பறந்த 3 ட்ரோன்கள்; உச்சகட்ட பாதுகாப்பு பணியில் ராணுவம்

Three more sightings of drones in Jammu; security agencies on alert: இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ட்ரோன்கள் காணப்பட்டு வருகின்றன

ஜம்மு நகரின் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலையில் மூன்று இடங்களில் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளை பதற்றத்திலேயே வைத்திருந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு 9.23 மணியளவில் மீரான் சாஹிப்பில் முதல் ட்ரோன் காணப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டாவது மற்றும் மூன்றாவது ட்ரோன்கள் புதன்கிழமை முறையே அதிகாலை 4.40 மற்றும் அதிகாலை 4.52 மணிக்கு கலுச்சக் மற்றும் குஞ்ச்வானி பகுதிகளில் காணப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் இருந்து, இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ட்ரோன்கள் காணப்பட்டு வருகின்றன.

செவ்வாய்க்கிழமை காலை, ரத்னுச்சக், கலுச்சக் மற்றும் குஞ்ச்வானி பகுதிகளில் ஒரு ட்ரோன் காணப்பட்டது. முந்தைய நாள், திங்களன்று, கலுச்சக் மற்றும் ரத்னுச்சக் இராணுவ நிலையங்களுக்கு மேலே ட்ரோன்கள் பறப்பதைக் கண்டதாக இராணுவம் கூறியதுடன், அவர்கள் ட்ரோன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவற்றை விரட்டியதாகவும் கூறுகின்றன.

ராணுவ பி.ஆர்.ஓ லெப்டினன்ட் தேவேந்தர் ஆனந்த் திங்களன்று “ராணுவ துருப்புக்களின் விழிப்புணர்வு மற்றும் செயலூக்க அணுகுமுறையால் ஒரு பெரிய அச்சுறுத்தல் தவிர்க்கப்பட்டது” என்று கூறியிருந்தார். மேலும் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், கடந்த மூன்று நாட்களில், பல பகுதிகளில் தேடிய போதிலும் பாதுகாப்பு படையினரால் ஒரு ட்ரோனைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jammu drones sightings air force attaack security forces alert

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express