Advertisment

‘வாஜ்பாய் வகுத்த பாதையில் நாம் நடந்திருந்தால்…’: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஒமர் அப்துல்லா பாராட்டு

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, “நாம் வழி தவறிவிட்டோம்” என்று கூறுகிறார். “வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு எப்படிச் சென்றார் என்பதை எடுத்துக்காட்டுகிறது, இது ‘எந்த இந்தியத் தலைவருக்கும் செய்வது கடினம்’ என்று ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
omar

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை முதல்வர் ஒமர் அப்துல்லா பேசினார். (பி.டி.ஐ)

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவால் நாம் வழி தவறிவிட்டோம் என்று கூறிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, வாஜ்பாய் வகுத்த பாதையில் சென்றிருந்தால் ஜம்மு காஷ்மீர் தற்போது இந்த நிலைக்கு வந்திருக்காது என்று கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘If we had walked on path Vajpayee charted…’: In J&K Assembly, Omar Abdullah’s praise for former PM

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், இரங்கல் குறிப்புகளின் போது ஒமர் அப்துல்லா பேசினார். கடந்த 6 ஆண்டுகளில் மறைந்த ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி உள்ளிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

“நான் நம்புகிறேன், வாஜ்பாய் ஜி வகுத்த பாதையில் நாம் நடந்திருந்தால், நாம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இருந்திருக்க மாட்டோம், அவர் இப்போது இல்லை, நாம் வழி தவறிவிட்டோம்” என்று ஒமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கூறினார்.

லாகூர் சென்று மினார்-இ-பாகிஸ்தானுக்கு பயணம் செய்ததற்காக வாஜ்பாய்,  “எந்த இந்தியத் தலைவருக்கும் இதைச் செய்வது கடினம்” என்று ஒமர் அப்துல்லா பாராட்டினார்.

“எல்லையில், அவர் (வாஜ்பாய்) நாம் நண்பர்களை மாற்ற முடியும், ஆனால், அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்று கூறினார். உரையாடல்தான் வழி என்று கூறிய அவர், பின்னடைவுகள் இருந்தாலும் நட்பின் கரத்தை நீட்டினார்,” என்று ஒமர் அப்துல்லா கூறினார்.  “நான் அவருடன் ஒரு அமைச்சராக பணியாற்றியுள்ளேன்... ஜம்மு காஷ்மீரில் நிலைமையை மேம்படுத்த அவர் எப்போதும் முயன்றார்... ஜம்மு - காஷ்மீரில் நிலைமை மோசமடைந்த போதெல்லாம், பேச்சுவார்த்தையே முன்னோக்கி செல்லும் வழி என்று அவர் கூறினார்.” என்று ஒமர் அப்துல்லா கூறினார்.

மக்களை நெருங்கி வருவதற்காக எல்லை தாண்டிய சாலைகளை வாஜ்பாய் திறந்து வைத்தார் என்று ஒமர் அப்துல்லா கூறினார். இப்போது சாலைகள் மூடப்பட்டுள்ளன. நம்மை ஒதுக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஒமர் அப்துலா கூறினார்.

பாலங்களைக் கட்டுவதற்கும் உறவுகளை வளர்ப்பதற்கும் வாஜ்பாயின் அர்ப்பணிப்பு, "பிராந்தியத்தில் அமைதி மற்றும் புரிந்துணர்வை நோக்கி தொடர்ந்து பணியாற்ற நம்மை ஊக்குவிக்க வேண்டும்" என்று ஒமர் அப்துல்லா கூறினார்.

கடந்த வாரம் காலமான பா.ஜ.க தலைவரும் நக்ரோடா சட்டமன்ற உறுப்பினருமான தேவேந்திர சிங் ராணாவையும் அவர் குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வுக்கு மாறுவதற்கு முன்பு ஒமர் அப்துல்லாவின் நெருங்கிய ஆதரவாளராக ராணா இருந்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் உயிரிழந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, ​​இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் - தேசிய மாநாட்டுக் கட்சியின் பஷீர் அகமது வீரி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் ரபீக் அகமது நாயக் - செப்டம்பர் 2021-ல் இறந்த ஹுரியத் தலைவர் ஜீலானியைப் பற்றி குறிப்பிட்டனர். சோபோரில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் - 1972, 1977 மற்றும் 1987-ல் - அவர் பிரிவினைவாத இயக்கத்தை முன்னெடுப்பதற்காக 1989-ல் சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu Kashmir Omar Abdullah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment