யூனியன் பிரதேசங்களாக மாறியது ஜம்மு – காஷ்மீர்… மாற்று அரசியலை உருவாக்கும் முனைப்பில் டெல்லி!

காஷ்மீரின் அரசியல் நிலையற்ற தன்மைக்கு முக்கிய அரசியல் கட்சிகளும் ஹூரியத்துகளும் தான் காரணம்.

Jammu Kashmir becomes union territory today

 Bashaarat Masood

Jammu Kashmir becomes union territory today :  ஜம்மு காஷ்மீருக்கான புதிய மாற்று அரசியலை முன்னெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதைத் தாண்டியும் ஜம்மு காஷ்மீருக்காக யோசிக்கும் இளைஞர்கள் மற்றும் அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் முஸாஃபர் ஹூசைன் பெய்க் போன்றோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது மத்திய அரசு.

இதற்கான முதல் நடவடிக்கையாக மூன்று முக்கிய ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள், சில தொழிலதிபர்களை உள்ளடக்கிய குழு ஒன்று ஐரோப்பாவின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு திங்கள் கிழமையன்று புது டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கிய மதிய உணவு நிகழ்வில் நடைபெற்றுள்ளது.

இந்த செய்தியை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க

இது வெறும் ஆரம்பம் மட்டுமே. ஆனால் மத்திய அரசு, இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது காஷ்மீரில் உருவாகியிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப இயலும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள், பாஜகவின் நட்பு கட்சியான பீப்பிள்ஸ் கான்பிரஸ் கட்சியின் தொண்டர்கள் உட்பட பல முக்கியமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் இந்த கைது நடவடிக்கை மிகவும் தேவையான ஒன்று என மத்திய அரசு கூறியுள்ளது. 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதும், அக்டோபர் 31ம் தேதி முதல் யூனியன் பிரதேசங்களாக செயல்பட இருக்கின்ற நேரத்தில் இவர்களால் பிரச்சனை ஏற்படக்கூடும் என்று அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

முன்னாள் துணை முதல்வர் மட்டுமின்றி அந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அல்டாஃப் புகாரி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் உஸ்மான் மஜீத் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர்கள் ஃபரூக் மற்றும் சன்னி சிங் உள்ளிட்டோர் கலந்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீநகரில் சந்தித்துள்லனர்.

இது மிகவும் விரைவாக நடைபெற்று வருகிறது என்று கூறும் பெய்க் தான் 2015ம் ஆண்டு பாஜகவுக்கும் பி.டி.பிக்கும் இடையேயான கூட்டணியை உருவாக்க பெரும் முயற்சி செய்தது. முதலில் ஒரு அஜெண்டா இருக்க வேண்டும். அதை வைத்து தான் புதிய அரசியல் திட்டத்தை உருவாக்கவோ, இருக்கின்ற கட்சியில் மாற்றங்களை உருவாக்கவோ இயலும். நாங்கள் இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும், மக்களிடமும் பேசி அந்த முடிவை மத்திய அரசுக்கு அறிவிப்போம்.

முஸாஃபிர் ஹூசைன் பெய்க் முன்னாள் அமைச்சர் அல்டாஃப் புகாரியுடன் பேசவும் விருப்பம் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு, தொழிலபதிபரான புகாரி பி.டி.பி. கட்சியில் இணைந்தார். முன்னாள் ஜம்மு – காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீதின் நெருங்கிய நண்பரான இவர் பாஜக – பிடிபி கூட்டணி கட்சியில் முக்கிய அமைச்சராக செயல்பட்டு வந்தார். ஆனால் மெகபூபா முஃப்தி இவர் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி கட்சியில் இருந்து நீக்கி அறிவித்தார். ஆகஸ்ட் 5ம் தேதி நிகழ்வைத் தொடர்ந்து கைது செய்யப்படாத அரசியல் கட்சித் தலைவரில் இவரும் ஒருவர்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களான உஸ்மான் மஜீத், அந்ரபி, மற்றும் சன்னி சிங் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர் குலாம் அகமது மிர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றான கட்சியை மத்திய அரசு விரும்புகிறது என்று அறிவித்த பிறகு நடைபெற்றுள்ளது இந்த சந்திப்பு. முக்கிய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இது ஜம்மு காஷ்மீரில் மாற்று அரசியலை உருவாக்கும் சந்திப்பாகவே கருதுகின்றனர். அஜித் தோவாலின் மதிய உணவு நிகழ்வில் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமில்லாமல் சந்தீப் சாட்டூ, ஷாமிம் மேரஜ் (ரியல் காஷ்மீர் ஃபுட்பால் க்ளப்பின் உரிமையாளர்கள்), ரைஷிங் காஷ்மீர் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆயாஸ் கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போதைய சிக்கல்களில் இருந்து காஷ்மீரை இந்த புதிய கட்சியால் உருவாக்க இயலும் என்றால் நிச்சயம் இந்த கட்சியில் ஒரு முக்கிய பங்காற்றுவேன் என விருப்பம் தெரிவித்துள்ளார் தஃவ்ஷீப் ரெய்னா என்ற சமூக ஆர்வலர் அறிவித்துள்ளார். காஷ்மீரின் அரசியல் நிலையற்ற தன்மைக்கு முக்கிய அரசியல் கட்சிகளும் ஹூரியத்துகளும் தான் காரணம். அவர்களுக்கு அதிகார மையம் நோக்கிய அரசியல் தான் தேவைப்படுகிறது. ஆனால் நாங்களோ மக்களுக்கான அரசியலை தர விரும்புகிறோம் என்று அறிவித்தார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jammu kashmir becomes union territory today amid attempts create space political alternative valley

Next Story
அயோத்தி வழக்கு, உலகின் மிக முக்கிய வழக்குகளில் ஒன்று – புதிய தலைமை நீதிபதி பாப்டே கருத்துsa bobde, ayodhya case, ayodhya babri masjid case, supreme court ayodhya case hearing, ayodhya verdict supreme court, bobde next chief justice of india, chief justice of india, supreme court, sc cji, ranjan gogoi, who is justice s a bobde
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express