காஷ்மீர் நிலவரத்தை சாதகமாக்க முயலும் பயங்கரவாத சக்திகள்... 2 பாகிஸ்தானியர்கள் கைது

யாருக்கும் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. குறிப்பாக பாதுகாப்பு படையினரால் யாருக்கும் எந்த வித இழப்பும் இல்லை - லெப்டினட் ஜெனரல் தில்லோன்

 Adil Akhzer, Bashaarat Masood

Jammu Kashmir bifurcation issue joint press conference : லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் ஊடுருவியதாகவும் அவர்கள் கைது செய்யபப்ட்டதாகவும் இந்திய ராணுவ ஜி.ஓ.சி, லெஃப்டினட் ஜெனரல் ஜெ.எஸ் தில்லோன் நேற்று (04/09/2019) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் அவர் “பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் சிலர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாத செயல்களை கட்டவிழ்த்துவிடும் எண்ணத்தில் ஊடுருவுகின்றார்கள்” என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் முனிர்கானும் கலந்து கொண்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 1 மாதம் ஆகின்ற நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் குல்மர்க் பகுதியில் நடமாடியது கண்டறியப்பட்டு அவர்கள் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

கடந்த மாதம், இந்தியாவின் இந்த செயலை கண்டித்து, போராட்டடத்தில் இறங்கிய காஷ்மீர் இளைஞர்கள் பலரை பாதுகாப்புத் துறையினர் தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 18 வயது இளைஞன் ஸ்ரீநகரில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று உயிர் இழந்ததாகவும் அறிவிக்கபபட்டது. இதன் மூலம் பகல் நேரங்களில் மக்கள் பொதுவெளிகளில் நடமாட தடை மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத ஊடுருவலை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் தங்களின் ஒப்புதல் வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் வீடியோ நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஒளிபரப்பட்டது. அதில் முகமது நாசிம் மற்றும் முகமது கலீல் என்ற இரு நபர்களும் தாங்கள் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் இருவரும் ராவல்பிண்டியை சார்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர். இவர்கள் இருவரின் கைது தொடர்பாக முறையாக பாகிஸ்தானின் டி.ஜி.எம்.ஒவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வீடியோக்களுமே போதும் எப்படி பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் மக்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவுக்குள் புகுந்து தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கிறார்கள் என்பதை கண்டறிய என்றும் அவர் கூறினார். சர்வதேச எல்லையில் கலகக்காரர்களின் லான்ச்பேட் இருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய தில்லோன், இரவும் பகலுமாக காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் கலகக்காரர்களை அனுப்பி காஷ்மீரின் அமைதியை சீர் குலைக்க முயல்கிறது பாகிஸ்தான் என்று அவர் கூறினார்.

இந்திய வரலாற்றில் காஷ்மீரின் மிக அமைதியான 30 நாட்கள் எது என்றால் கடந்த முப்பது நாட்கள் தான். மக்கள் அவ்வளவு அமைதியாக இருக்கின்றார்கள். ஒரு நாளும் ஒரு கலவரமும் நடைபெறவில்லை. யாருக்கும் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. குறிப்பாக பாதுகாப்பு படையினரால் யாருக்கும் எந்த வித இழப்பும் இல்லை என்று கூறிய அவர், இங்கு நடைபெற்ற அமைதியின்மைக்கு காரணம் தீவிரவாதிகளும், கல்லெறி தாக்குதல் நடத்தும் கலகக்காரர்களும் தான் என்று அவர் கூறினார்.

புதன் கிழமை முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து லேண்ட்லைன் சேவைகளும் மறுபடியும் செயற்பாட்டுக்கு வரும் என ஸ்ரீநகர் துணை ஆணையர் ஷாகித் இக்பால் சௌத்ரி அறிவித்தார். குப்வாராவில் ஏற்கனவே செல்போன்கள் இயக்கம் துவங்கிவிட்டது. இனி வருகின்ற நாளில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பகுதிகளிலும் நெட்வொர்க் சேவைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இறந்து போன இளைஞர் குறித்து தெரிவிக்கையில், சௌரா பகுதியை சேர்ந்த அஸ்ரர் ஃபிர்துஸ் கான் என்று தெரிய வந்துள்ளது. சிறப்பு அந்தஸ்துக்கான சட்டம் நீக்கப்பட்ட பின்பு ஆகஸ்ட் 6ம் தேதி உள்ளூர்காரர்களுடன் சேர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கற்களால் காயம்பட்ட அவரரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட போது அவர் மீது பெல்லட் குண்டுகள் பாய்ந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. ரெய்ச்சர்ஸ் இதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையோ டியர் கேஸ் கேனிஸ்டர் மூலமாக அவர் தாக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 29 நாட்கள் மரணப்படுக்கையில் இருந்த அஸ்ரர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது இன்னும் 18 ஆகவில்லை என்றும் அவர் 9ம் வகுப்பு தான் படிக்கிறார் என்றும் அவருடைய பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து கேள்வி எழுப்பிய போது ஷெல்லிங்காளோ, பெல்லட்டுகளாலோ அவர் தாக்கப்படவில்லை. இது போன்ற தகவல்களெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது என முனிர் கான் செய்தியாளர்களிடம் பதில் கேள்வி கேட்கின்றார். அஸ்ரரின் மருத்துவ சான்றிதழ்களை வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பிய போது, இந்த வழக்கை காவல்துறை விசாரிக்கும் என்று முடித்துக் கொண்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close