/tamil-ie/media/media_files/uploads/2019/08/EA9aRtjWwAEiUcO.jpg)
Jammu Kashmir Enhanced troop deployment
Jammu Kashmir Enhanced troop deployment : ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு சிறப்பு அந்தஸ்த்துகளுடனும், பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய யூனியனில் இணைந்தது. அம்மாநில மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் மிக முக்கியமான அரசியல் சாசனம் தானம் தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 35 ஏ. இந்த சட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வெளி மாநிலத்தவர்களால் நிலம் வாங்க இயலாது. அரசு தரும் சலுகைகளை கல்வி மற்றும் இதர நிறுவனங்களில் பெற இயலாது. மாநில அரசின் முழு வேலை வாய்ப்புகளும் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கே போய் சேரும்.
இதனை எதிர்த்தும், இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த வண்ணமே இருக்கின்ற நிலையில், காஷ்மீரில் மேலும் 10,000 ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ஜம்மு - காஷ்மீர் பகுதியில் நிலவரம் எப்படி உள்ளது என்பதை இங்கு காண்போம்..
Express Photo by Shuaib Masoodi 03-08-2019வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி படிப்பவர்கள் அனைவரும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்திரை திடீரென முழுவதும் ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் திருப்பி அனுப்பட்டு வருகின்றனர்
Express Photo by Shuaib Masoodi 03-08-2019தற்போதைய நிலவரப்படி 11 ஆயிரம் சுற்றுலாவாசிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் பக்தர்கள், சிலர் வெளிநாட்டினர் என்று அரசு தரப்பு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அறிவித்துள்ளது.
Express Photo by Shuaib Masoodi 03-08-2019எந்த நேரத்திலும் எந்த பிரச்சனையும் நிகழலாம். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று உணரும் உள்ளூர்வாசிகள் தங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
Express Photo by Shuaib Masoodi 03-08-2019என்.ஐ.டி.யில் படிக்கும் வெளியூர் / வெளி மாநில மாணவர்கள் நேற்று தங்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு கேம்பஸில் இருந்து வெளியேறினர். மேலும் மீண்டும் வகுப்புகள் எப்போது கூடும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை கல்லூரி செயல்படாது என்றும் அறிக்கப்பட்டுள்ளது.
Express Photo by Shuaib Masoodi 03-08-2019இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரை சந்தித்து நிலைமையை சீர்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Express Photo by Shuaib Masoodi 03-08-2019மேலும் இம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பினை அளிக்கும் பொறுப்பானது அரசுக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதல் அல்லது ஃபியாதீன் என்று கூறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அபாயமும் இருந்து வருவதால் அனைவருக்கும் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அவர்.
Express Photo by Shuaib Masoodi 03-08-2019அமர்நாத் யாத்திரையைப் போன்றே ஒவ்வொரு வருடமும் காஷ்மீர் பள்ளத்தாக்கின், கிஷ்த்வர் பகுதியின் அருகே இருக்கும் பத்தாரில் அமைந்திருக்கும் மச்சைல் மாதா புனித தலத்திற்கும் பக்தர்கள் செல்வது வழக்கம். தற்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us