நவீத் இக்பால், அருண் சர்மா
Mehbooba declines to meet party team: மத்திய அரசு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பு அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாகிலிருந்து வெளியேற வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசனை உத்தரவிடப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு அதனை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் திங்கள்கிழமை நீக்கினார்.
சத்ய பால் மாலிக் அவருடைய ஆலோசகர்கள் மற்றும் தலைமைச் செயலாளருடன் நடத்திய பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து பள்ளத்தாக்குக்கு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வரலாம் என்று அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், “இது அக்டோபர் 10 முதல் நடைமுறைக்கு வரும்” அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி 370வது பிரிவை திருத்தி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான நடவடிக்கையை மத்திய் அரசு மேற்கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஆளுநர் சத்ய பால் மாலிக் நிர்வாகம் அமர்நாத் யாத்திரையை குறைத்து, சுற்றுலாப் பயணிகளை வெளியேறச் சொன்னது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த உளவுத்துறை தகவல்களை அது மேற்கோள் காட்டியது. இந்த ஆலோசனையை மாநில உள்துறை அமைச்சகம் வழங்கியது.
முன்னதாக, காஷ்மீரின் நிலைமை கட்சி பிரச்சினைகளை விட பெரியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவர் மெஹபூபா முப்தி தனது கட்சி உறுப்பினர்களின் ஒரு குழுவைச் சந்திக்க மறுத்துவிட்டார். ஆளுநர் சத்ய பால் மாலிக் மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கு அவர்கள் தலைவரை சந்திக்க அனுமதி வழங்கிய பின்னர் ஒரு நாள் கழித்து, அக்கட்சி திங்கள்கிழமை அவருடன் நடைபெற இருந்த சந்திப்பை அடுத்த வாரம் வரை ஒத்திவைத்தது.
மெஹபூபா முஃப்தியுடன் கட்சியின் பெரும்பாண்மையான தலைமைகள் ஆகஸ்ட் 5 முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து அவர் எந்த கட்சி உறுப்பினரையும் சந்திக்கவில்லை.
ஸ்ரீநகரில் காலை 11 மணிக்கு சந்திப்பதற்கு ஜம்முவில் இருந்து சில உறுப்பினர்கள் கிடைக்காததால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு மெஹபூபாவுடனான சந்திப்பை ஒத்திவைக்கும் முடிவை பிரதிநிதிகள் எடுத்ததாக மக்கள் ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.
இருப்பினும், கட்சி வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், மெஹபூபா வருத்தத்தில் உள்ளார் என்றும் காஷ்மீரின் நிலைமை எந்தவொரு கட்சி விஷயத்தையும் விட பெரியது என்பதால் அவர் சர்வதேச முட்டுக்கைட்டையாக விரும்பவில்லை என்று கூறி கட்சியின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்துவிட்டார் என்று தெரிவிக்கின்றன.
அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சஷ்மஷாஹியில் உள்ள சுற்றுலா இல்லத்தில் தனது குடும்பத்தினரை மட்டும் சந்தித்துள்ளார்.
மெஹபூபாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் “ஊடகங்களில் வெளியான செய்திப்படி நாளை ஸ்ரீநகரில் மெஹபூபா முஃப்தி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஜம்மு தலைவர்கள் இடையேயான சந்திப்பு இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் உச்சநீதிமன்றம் மும்பை ஆரே காலனியில் அதிகாரிகள் மேலும் மரங்களை வெட்டுவதைத் தடுத்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரை மும்பையின் ஆரே காலனியையும் ஒப்பிட்டுப் பார்க்க கோரினார்.
மெஹ்பூபா டுவிட்டர் பக்கம் அவருடைய மகள் இல்திஜாவால் நிர்வகிக்கப்படுகிறது. அதில் ஒவரு கூறுகையில், “செயல்பாட்டாளர்கள் ஆரேயில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி. காஷ்மீரிகள் சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துரிமைக்கான உரிமையை ஏன் இழந்தார்கள் என்று ஒருவர் ஒருவர் ஆச்சரியப்படுகிறார். அவர்கள் இப்போது மற்ற இந்தியர்களுடன் இணையாக இருப்பதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட பறிக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
59 நாட்களுக்குப் பிறகு மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில், உயர் மட்ட தலைவர்கள் சந்திப்பை பற்றி அவர்கள் ஒருவித அரசியல் செயல்பாட்டை மிண்டும் தொடங்குவது பொய்யானது என்று சித்தரிக்கிற அரசாங்கத்தின் சொல்லாட்சியில் கட்சிக்கு மகிழ்ச்சி இல்லை.” என்று தெரிவித்தார்.
அந்த தலைவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் இந்த கூட்டங்களை இயல்பான நிலைக்கு திரும்புகிறது என்பதற்கான அடையாளமாக காட்ட விரும்புகிறது. ஆனால், இது களத்தில் உண்மை அல்ல. என்று கூறினார். மேலும் அவர் கூறியபடி, மெஹபூபாவை சந்திக்கவிருந்த கட்சி பிரதிநிதிகள் குழு மொபைல் போன்களை எடுத்துச் செல்லக் கூடாது. ஊடகங்களுடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் அரசாங்கம் விதித்தது என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த நிபந்தனைகள் கூட்டத்தை நோக்கமற்றதாக ஆக்கியது” என்று இந்த தலைவர் மேலும் கூறினார். “தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்கள் தலைவரை சந்தித்த பிறகு நாங்கள் எவ்வாறு அமைதியாக இருப்போம்? நாங்கள் ஒரு அரசியல் கட்சி, முக்கியமாக எங்கள் மக்களுடன் பேசுவதற்கு எங்களை அனுமதிக்காத வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் (அரசாங்கம்) அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்கத் தொடங்கியுள்ளதை உலகுக்குச் சொல்ல விரும்புகிறார்கள். இது அரசியல் நடவடிக்கை அல்ல.”
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர்கள் போன்ற கட்சியின் மூத்த செயற்பாட்டாளர்கள் அடங்கிய காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிட்டத்தட்ட முழுத் தலைமையும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மெஹபூபா உயர் பாதுகாப்பு கொண்ட சஷ்மஷாஹியில் (ஒரு துணை சிறைச்சாலையாக ஆக்கப்பட்டுள்ளது) தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தலைவர்கள் சென்டார் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் விவகாரக் குழு (பி.ஏ.சி) வேத் மகாஜன் உறுப்பினர் கூறுகையில், “கட்சித் தலைவரைச் சந்திக்க அனுமதி கோரி ஆளுநரிடம் கோரிக்கை அனுப்பினோம். ஸ்ரீநகரில் காலை 11 மணிக்கு மெஹபூபாவை பார்ப்பதற்கு வருகை தர 18 உறுப்பினர்கள் கொண்ட குழுவுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் துணை ஆணையர் அலுவலகம் மூலம் ஒப்புதல் பெற்றோம்.” என்றார்.
மேலும், அவர் கூறுகையில், கட்சியின் ஜம்மு பிரிவு இந்த வளர்ச்சியை கட்சி பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தது. “ஆனால் அவர்களில் சிலர் ராஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசி ஆகிய இடங்களிலிருந்து வர வேண்டியிருந்தது. மேலும், காலை 9 மணி விமானத்திற்கு விமான நிலையத்தை அடைய முடியாது என்று அவர்கள் கூறினர். எனவே இரவு 11 மணிக்கு ஒரு கூட்டத்தை நடத்தி கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்தோம். அடுத்த வாரத்தில் மீண்டும் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறுவோம்.” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.