கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்

Jammu kashmir governor Satyapal Malik : கவர்னர் பதவி பலவீனமானது. கவர்னர்கள், பத்திரிகை சந்திப்பை நடத்த உரிமை இல்லை

By: October 22, 2019, 9:54:22 PM

இந்தியாவில் கவர்னர் பதவி என்பது பலவீனமானது, கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது என காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ண தேவி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: கவர்னர் பதவி பலவீனமானது. கவர்னர்கள், பத்திரிகை சந்திப்பை நடத்த உரிமை இல்லை. மனதில் பட்டதை பேசவும் முடியாது. எனது வார்த்தை டில்லியில் உள்ளவர்களை காயப்படுத்தாது என நம்புகிறேன். இதன் காரணமாக 3 நாட்கள் பயத்தில் இருந்தேன். நாட்டில் உள்ள பணக்காரர்கள், நாட்டில் உள்ள கல்வி முறையை மேம்படுத்த உதவி செய்வதில்லை என்ற எனது கருத்தில் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Jammu kashmir governor satyapal malik remark about his position

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X