Advertisment

ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொலை

தெற்கு காஷ்மீரின் அவந்திப்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்புள் முஜாஹிதீன் இயக்கத்தின் கம்மாண்டர் ரியாஸ் நைகூ மற்றும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jammu kashmir, Hizbul Mujahideen commander killed, Riyaz Naikoo killed, who is Riyaz Naikoo, ஜம்மு காஷ்மீர், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொலை, ரியாஸ் நைகூ, hizbul commander Riyaz Naikoo killed, awantipora encounter, pulwama encounter, J&K hizbul leader killed, kashmir news

jammu kashmir, Hizbul Mujahideen commander killed, Riyaz Naikoo killed, who is Riyaz Naikoo, ஜம்மு காஷ்மீர், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொலை, ரியாஸ் நைகூ, hizbul commander Riyaz Naikoo killed, awantipora encounter, pulwama encounter, J&K hizbul leader killed, kashmir news

தெற்கு காஷ்மீரின் அவந்திப்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்புள் முஜாஹிதீன் இயக்கத்தின் கம்மாண்டர் ரியாஸ் நைகூ மற்றும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Advertisment

காஷ்மீர் தெற்குப் பகுதியான அவந்திப்போரா பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினருர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் கம்மாண்டர் ரியாஸ் நைகூ அவருடன் மற்றும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் புதன் கிழமை கூறினார். ரியாஸ் நைகூ என்கிற முஹமது பின் காசிம் புல்வாமாவில் உள்ள பெய்க்போரா கிராமத்தில் சிக்கினார்.

மேலும், இன்று காலை முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்த உடனேயே, அந்த பகுதியில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து செல்போன் சேவைகள் மூடப்பட்டன.

பெய்க்போரா பகுதியில் போராளிகள் இருப்பதைப் பற்றி பாதுகாப்புப் படையினர் எச்சரித்ததைத் தொடர்ந்து நேற்று இரவு அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.

காஷ்மீரின் மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான நைகூ, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஹிஸ்புல் தலைமையை முகமது யாசின் இடூ அல்லது மெஹ்மூத் கஸ்னாவி என்பவரிடமிருந்து 2017 ஆகஸ்டில் ஷோபியனின் அவீனீராவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட பின்னர் அவர் பொறுப்பேற்றார். கஸ்னாவிக்கு முன்பு, பள்ளத்தாக்கில் போர்க்குணத்தின் போஸ்டர் பையன் புர்ஹான் வாணி, ஜூலை 2016 இல் கொல்லப்பட்டார்.

கஸ்னாவி கொல்லப்படுவதற்கு முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு தகவல் தெரிவித்த புர்ஹான் வாணி, ஜூலை 2016 இல் கொல்லப்பட்டார்.

ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியரான நைகூ 2012 இல் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்தார். நைகூ தலைக்கு ரூ.12 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை போலீசார் எட்டு ஆண்டுகளாக தேடி வந்தனர்.

இதனிடையே, அவந்திபோராவில் உள்ள ஷர்ஷாலி க்ரூ பகுதியில் நடந்த ஒரு மோதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த மோதல் அதிகாலை 1 மணிக்கு தொடங்கி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் முதல் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, ஹண்ட்வாராவில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 2 ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி உட்பட 5 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். திங்கள்கிழமை மாலை ஹண்ட்வாராவில் கூட்டு சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் செவ்வாய்க்கிழமை, பயங்கரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கைகள் வரும் காலங்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே வலுப்பெற்றுள்ளதையும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதையும், வரவிருக்கும் காலங்களில் அவை மேலும் தீவிரமடையும் என்பதையும் என்று 3 சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்களுக்கு மாலை அணிவிக்கும் போது ஊடகங்களுடன் பேசிய டிஜிபி தில்பாக் சிங் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment