scorecardresearch

ஜம்மு காஷ்மீர்: பிரதமரின் அனைத்து கட்சி கூட்டம்… மாநில அந்தஸ்து வழங்க குலாம் நபி ஆசாத் கோரிக்கை

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமரின் அனைத்துக் காட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்துகொண்ட குலாம் நபி ஆசாத், “ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்தார்.

jammu kashmir, jammu kashmir leaders, narendra modi all party meeting, Ghulam Nabi Azad said five demands, Mehbooba Mufti, ஜம்மு காஷ்மீர், அனைத்துக் கட்சி கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி, Omar Abdullah, J&K Apni Party's Altaf Bukhari, jammu kashmir issues, jammu kashmir delimitation

பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கும் இடையே மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஐந்து கோரிக்கைகளை வைத்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். ஜனநாயகத்தை மீட்டெடுக்க சட்டமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பண்டிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். உள்நாட்டு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் பிரதமருடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்டதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தை முக்கியமான நல்ல மற்றும் நேர்மறையான கூட்டம் என்று கூறிய மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் முசாபர் உசேன் பேக், “ஜம்மு-காஷ்மீரை மோதல் மண்டலம் என்பதற்கு பதிலாக அமைதி மண்டலமாக மாற்ற எல்லாவற்றையும் செய்வேன் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அனைத்து தலைவர்களும் மாநில அஸ்ந்தஸ்து வழங்கக் கோரினார்கள். அதற்கு பிரதமர் எல்லை வரையறை செயல்முறை முதலில் முடிவுக்கு வர வேண்டும். பின்னர், பிற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கூறினார். இது ஒரு திருப்திகரமான கூட்டம். ஜம்மு-காஷ்மீரில் அமைதியை மீட்டெடுப்பதற்கு முழுமையான ஒருமித்த கருத்து உள்ளது” என்று முசாபர் உசேன் பேக் கூறினார்.

இந்த கூட்டத்திற்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர், பிரதமர் நரேந்திர மோடி கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் மாநில அந்தஸ்து குறித்த பிரச்சினையை எழுப்புவதாக தெரிவித்தார். “2019 ஆம் ஆண்டின் நிகழ்வுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய கூட்டத்தில் நிகழ்வுகளைப் பொறுத்து அதற்கேற்ப பதிலளிப்போம்” என்று கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுடெல்லி ஜம்மு காஷ்மீர் நகரில் உள்ள பிரதான கட்சிகளின் கூட்டணியான குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியின் (பிஏஜிடி) தலைவர்களை சந்தித்தார்.

ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரதமரின் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஜம்மு-காஷ்மீரின் அனைத்து வளர்ச்சியையும் உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலம் விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் வாக்குறுதியளித்தபடி மாநிலத்தை மீட்டெடுப்பதில் டிலிமிட்டேஷன் பயிற்சி மற்றும் அமைதியான தேர்தல்கள் முக்கியமான மைல்கற்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி கூறுகையில், “ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மக்கள் நிறைய சிரமங்களில் உள்ளனர். அவர்கள் கோபப்படுகிறார்கள், வருத்தப்படுகிறார்கள், உணர்ச்சிவசப்படுகிறார்கள். அவர்கள் அவமானப்படுகிறார்கள். 370 வது பிரிவு அரசியலமைப்புக்கு எதிரான முறையில் சட்டவிரோதமாகவும் தவறாகவும் ரத்து செய்யப்பட்ட முறையை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஏற்கவில்லை என்று நான் பிரதமரிடம் தெரிவித்தேன்.” என்று கூறினார்.

தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா கூறுகையில், “ஆகஸ்ட் 5, 2019 அன்று செய்யப்பட்ட விஷயங்களுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கவில்லை என்று பிரதமரிடம் தெரிவித்தோம். அதை ஏற்க நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், நாங்கள் சட்டத்தை கையில் எடுக்க மாட்டோம். இதற்காக நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம். நம்பிக்கைகள் மீறப்பட்டு மாநிலம் மற்றும் மத்திய அரசு என கருப்பு வெள்ளை என எதிரிகளாக இருப்பதாகவும் நாங்கள் பிரதமரிடம் தெரிவித்தோம். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது மத்திய அரசின் கடமை” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜம்மு காஷ்மீரில் அடிமட்டம் வரையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே நம்முடைய முன்னுரிமை ஆகும். தேர்தல்கள் விரைவாக நடக்க வேண்டும், இதனால் வாக்குப்பதிவு நடக்கும். மேலும், ஜம்மு காஷ்மீர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைப் பெறுகிறது. அது ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிப் பாதைக்கு வலிமை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Jammu kashmir leaders narendra modi all party meeting ghulam nabi azad said five demands