/indian-express-tamil/media/media_files/2025/08/13/kashmir-police-security-2025-08-13-05-52-26.jpeg)
பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகளை வழங்கியதற்காக ஒரு வாரத்தில் 30 பேரை கைது செய்த காவல்துறை. சரளா பட் கொலையுடன் தொடர்புடைய ஸ்ரீநகர் மாவட்டத்தின் 8 இடங்களில் சிறப்பு புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Photograph: (File Photo/ Representative Image)
ஏப்ரல் 18, 1990-ல் சோராவில் உள்ள எஸ்.கே.ஐ.எம்.எஸ்-ன் ஹப்பா கட்டூன் விடுதியிலிருந்து சரளா பட் கடத்தப்பட்டார். அடுத்த நாள் காலை, அவரது உடலில் குண்டு காயங்களுடன் சடலமாகக் கிடந்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மூடியிருந்த 27 வயது காஷ்மீரி பண்டிட் செவிலியரின் கொடூரமான கொலை வழக்கை மீண்டும் திறந்துள்ளது ஜம்மு காஷ்மீர் காவல்துறை சிறப்பு புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.ஏ). திங்கள்கிழமை இரவு, ஆதாரங்களைச் சேகரிக்க பல இடங்களில் சோதனை நடத்தியது.
ஏப்ரல் 18, 1990-ல் சோராவில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எஸ்.கே.ஐ.எம்.எஸ்) ஹப்பா கட்டூன் விடுதியிலிருந்து கடத்தப்பட்ட சரளா பட் கொலையுடன் தொடர்புடைய ஸ்ரீநகர் மாவட்டத்தின் 8 இடங்களில் சிறப்பு புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சரளா பட்-ன் உடல் அடுத்த நாள் காலை உமர் காலனி, மல்லாபாக் என்ற இடத்தில் குண்டு காயங்களுடன் சடலமாகக் கிடந்தது.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை வட்டாரங்கள் கூறியபடி, சரளா பட் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எஃப்) உடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டார். அவர் ஒரு போலீஸ் உளவாளி என்று குறிப்பிட்ட ஒரு குறிப்பு அவரது உடலில் கண்டெடுக்கப்பட்டது. அப்போதைய விசாரணையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது.
அரசு வேலைகளை விட்டுவிட்டு பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று பண்டிட்டுகளுக்கு பயங்கரவாதிகள் பிறப்பித்த ஆணைகளை சரளா பட் மீறியதாகவும், ஜே.கே.எல்.எஃப்-ன் அதிகாரத்தை வெளிப்படையாக எதிர்த்ததால்தான் அவர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது மரணத்திற்குப் பிறகும் அவரது குடும்பத்தினர் அச்சுறுத்தல்களைச் சந்தித்ததாகவும், உள்ளூர் மக்கள் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் அவர்கள் கூறினர்.
இந்த வழக்கு கடந்த ஆண்டு சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சோதனைகள், சரளா பட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு "முழு பயங்கரவாத சதியையும் அம்பலப்படுத்த" உதவும் "குற்றவாளி ஆதாரங்களை" மீட்டெடுக்க வழிவகுத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
1990-களில் நடந்த "கொடுரமான பயங்கரவாதச் செயல்களுக்கு"ப் பின்னால் இருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தண்டிக்கும் ஜம்மு காஷ்மீ நிர்வாகத்தின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான சிறப்பு புலனாய்வு அமைப்பின் முயற்சிகளின் ஒரு பகுதி இந்த சோதனைகள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.