jammu kashmir: லேண்ட்லைன் சேவைக்காக வரிசையில் நிற்கும் மக்கள்

jammu and Kashmir: இப்போது லேண்ட்லைனைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் பழைய காலத்திற்கு திரும்பி சென்றுக் கொண்டிருகின்றோம்" என்றார். 

jammu and Kashmir: இப்போது லேண்ட்லைனைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் பழைய காலத்திற்கு திரும்பி சென்றுக் கொண்டிருகின்றோம்" என்றார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Right to access internet a fundamental right, Jammu kashmir, clampdown, 144

Right to access internet a fundamental right`

இந்திய அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைகாக,கடந்த பதினைந்து நாட்ககளாய் தகவல் தொடர்புகளை முற்றிலுமாய்  தடை செய்திருந்தன. தற்போது, படிப்படியாய் தடைகளை தளர்த்தி லேண்ட்லைன்  சேவைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.   அதனால், தற்போது லேண்ட்லைன் தொலைபேசியில் தான் அம்மக்கள் தகவல் பரிமாற்றங்களை செய்யும் சூழல் உருவாகியுள்ளது. லேண்ட்லைன் இவ்வளவு முக்கியத்தும் அடையும் என்பது அம்மக்களுக்கே  ஆச்சரியமாகத்  தான் உள்ளது .

Advertisment

ஸ்ரீநகரின்  ராம் பாக் பகுதியில் வசிக்கும் சுபைர் ஜெஹாங்கிர் இது பற்றி கூறுகையில், " லேண்ட்லைன் மட்டுமே வேலை செய்யும் என்ற ஒரு நாள் வரும் என்று நாங்கள்  யாரும் நினைத்துப் பார்த்ததில்லை. என் குழந்தைகள் வெளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள், மொபைல் போன் இல்லாததால் பேச முடியவில்லை. லேண்ட்லைன் கனெக்சன் வேண்டி இப்போது பிஎஸ்என்எல் செல்லவிருக்கிறேன்" என்றார்.

பிஎஸ்என்எல் இணைப்பகத்திலிருந்து  கன்யாரில் வசிக்கும் அப்துல் மஜித் இது பற்றி தெரிவிக்கையில்," எங்கள் லேண்ட்லைன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யவில்லை. இன்று, இணைப்பை புதுப்பிக்க நான் இங்கு வந்தேன். இப்போது லேண்ட்லைனைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் பழைய காலத்திற்கு திரும்பி சென்றுக் கொண்டிருகின்றோம்" என்றார்.

ஒரு மூத்த பிஎஸ்என்எல் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவிக்கையில்"புதிய இணைப்புகளுக்கான பொது மக்களிடமிருந்தும் கோரிக்கைகளை நாங்கள் பெற்று வருகிறோம். லேண்ட்லைன்ஸ் சேவையின் தேவை தற்போது அதிகமாகி உள்ளது என்பதில் சந்தேகமில்லை, ”என்று கூறினார்.

Advertisment
Advertisements

மேலும், பாதுகாப்பு நிலைமை  சரி இல்லாததால், எங்கள் ஊழியர்களால் புதிய இணைப்பகம் கொடுப்பதற்கான சாத்திய கூறுகளை உருவாக்க முடியவில்லை என்றும் தனது கருத்தை  தெரிவித்தார்.

Jammu And Kashmir

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: