ஜம்மு: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக்கொலை!

பரூக் அப்துல்லாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக் கொலை

By: August 4, 2018, 12:52:56 PM

பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டிற்குள் இன்று அத்துமீறி நுழைந்த நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் வீடு ஜம்முவின் பதிண்டி பகுதியில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை இவரது வீட்டை நோக்கி மர்ம நபர் ஒருவர் ஓட்டி வந்த கார், வீட்டின் முன்பக்க கேட் மீது காரை மோதியது. தொடர்ந்து, அந்த நபர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தும் அவர் நிற்காமல் உள்ளே சென்றுள்ளார். இதனால், பாதுகாப்புப் படையினர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபர் யார்? என்பது விசராணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், எதற்காக அவர் பரூக் அப்துல்லா வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஜம்மு சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் விவேக் குப்தா கூறுகையில், “அந்த மர்ம நபர், மெயின் கேட்டை உடைத்து உள்ளே சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடனும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு காயம் ஏற்படடது. தொடர்ந்து, வீட்டிற்குள் நுழைந்து அந்த நபர் அங்கிருந்த சில பொருட்களை அடித்து நொறுக்கினார். இதையடுத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்” என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Jammu man shot dead while trying to forcibly enter former cm farooq abdullahs residence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X