2015 மற்றும் 2020 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் (ஏ.ஏ.பி) கைகளில் பா.ஜ.க தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தது. இதில் 18 கிராமப்புற தொகுதிகளில் மோசமான பின்னடைவை சந்தித்தது.
ஆனால், இந்த முறை பா.ஜ.க திருப்புமுனையை உருவாக்கி, 27 வருட இடைவெளிக்குப் பிறகு தலைநகரில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஜாட் மற்றும் குஜ்ஜார் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் பெரும்பாலும் தலைநகரின் புறநகரில் உள்ள வடமேற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் அதிக அளவில் குவிந்துள்ள கிராமப்புற தொகுதிகளிலும் ஆம் ஆத்மியை வீழ்த்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Focus on Jats, Gujjars, drawing room meetings: How BJP clawed its way back in rural Delhi
டெல்லி பா.ஜ.க ஓ.பி.சி மோர்ச்சாவின் தலைவர் சுனில் யாதவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், பா.ஜ.க கட்சி வித்தியாசமான உத்தியைக் கடைப்பிடித்து, இந்த பகுதிகளில் ஓ.பி.சி வாக்குகளில் பாதியைக் கைப்பற்றியது என்று கூறினார். “ஜாட்கள், குஜ்ஜர்கள், யாதவர்கள், சைனிகள், பிரஜாபதிகள் மற்றும் ராம்கர்ஹியாக்கள் போன்ற 52 ஓ.பி.சி சமூக குழுக்களில் 24 குழுக்களை உருவாக்கினோம். இது தோராயமாக 50% மக்கள்தொகையைக் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் கவலைகளும் தீர்க்கப்பட்டன.
தலா 10 பேர் கொண்ட சிறிய சிறிய அளவிலான (டிராயிங் ரூம்) கூட்டங்கள் தவிர, சம்மேளனங்கள் (பெரிய கூட்டங்கள்) மூலம் சுமார் 24,000 பேர் சென்றடைந்தது. சுமார் 65,000 பேர் இந்த கூட்டங்களை பதிவேற்றியுள்ளனர், மேலும் இவை சுமார் 1 லட்சம் பேரை சென்றடைந்துள்ளன" என்று பாஜக தலைவர் சுனில் யாதவ் கூறினார்.
தேர்தலுக்கு முன்னதாக, டெல்லியின் 360 கிராமங்களின் தலைவர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி மங்கோல்புரி கலனில் நடந்த மகாபஞ்சாயத்தில், தேர்தலைப் புறக்கணிக்கும் தங்கள் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து விலகி, "தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவளிக்க" முடிவு செய்ததை அடுத்து, பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பிப்ரவரி 1 ஆம் தேதி, பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, 360 கிராமங்கள் மற்றும் அதில் வசிக்கும் 36 சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் "பாலம் 360" இன் தலைவர் சுரேஷ் சோலங்கி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார்.
பா.ஜ.க மாற்றியமைக்கப்பட்ட வியூகம் மற்றும் "பாலம் 360" இன் ஆதரவும் பலனைத் தந்தது. பா.ஜ.க கட்சி 18 இடங்களில் 13 இடங்களை வென்றது, அவற்றில் 6 ஐ 50% க்கும் அதிகமான வித்தியாசத்துடன் வென்றது. இந்த வெற்றி மிகவும் அமோகமாக இருந்தது, பா.ஜ.க தலைவர்களில் ஒரு பகுதியினர் மற்றும் சுரேஷ் சோலங்கி ஆகியோர் அடுத்த முதல்வரை கிராமப்புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். நாங்கள் சொல்வதைக் கேட்காததால் ஆம் ஆத்மி கட்சி அடித்துச் செல்லப்பட்டது. டெல்லியின் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆக வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்று சுனில் சோலங்கி கூறினார்.
வாக்குப் பங்கைப் பொறுத்தமட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற 37.93% வாக்குகளுடன் ஒப்பிடுகையில், கிராமப்புறங்களில் பா.ஜ.க 44.68% வாக்குகளைப் பெற்றுள்ளது. மாறாக, ஆம் ஆத்மி இந்த இடங்களில் 17ல் இருந்து ஐந்தாகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் அதன் வாக்குப் பங்கு 2020 இல் 56.23% இலிருந்து 43.03% ஆகக் குறைந்தது.
பா.ஜ.க-வின் வேட்பாளர் தேர்வும் அதன் மாற்றப்பட்ட உத்தியை பிரதிபலித்தது. கட்சியின் மாபெரும் தலைவரும் ஜாட் முகமுமான பர்வேஷ் வர்மா, புதுடெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து, முதல்வர் பதவிக்கு முன்னணியில் இருக்கிறார். அவர் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர். அவர் முன்பு மேற்கு டெல்லியின் எம்.பி.யாக பணியாற்றியுள்ளார், இது மடிபூர், மத்தியாலா மற்றும் நஜப்கர் போன்ற கிராமப்புற தொகுதிகளை உள்ளடக்கியது.
2013 சட்டமன்றத் தேர்தலில், அவர் கிராமப்புற பெல்ட்டில் விழும் மற்றொரு தொகுதியான மெஹ்ராலியில் வெற்றிகரமாக போட்டியிட்டார். பர்வேஷின் தந்தையும் முன்னாள் டெல்லி முதல்வருமான சாஹிப் சிங் வர்மாவும் 1999 மற்றும் 2004 க்கு இடைப்பட்ட காலத்தில், டெல்லியின் கிராமப்புற மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
பா.ஜ.க-வின் மற்றொரு ஜாட் முகமும், முன்னாள் டெல்லி மந்திரியுமான கைலாஷ் கெஹ்லோட்டை, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, பிஜ்வாசன் தொகுதியில் நிறுத்தியது. அவர் தனது முன்னாள் கட்சி சகாவான சுரேந்தர் பரத்வாஜை 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார், அதே சமயம் எஸ்.சி-ஒதுக்கீடு செய்யப்பட்ட மடிபூர் தொகுதியில் பா.ஜ.க-வின் கைலாஷ் கங்வால் முன்னாள் துணை சபாநாயகர் ராக்கி பிர்லாவை தோற்கடித்தார்.
பா.ஜ.க-வின் குஜ்ஜர் முகமான ரமேஷ் பிதுரி, கல்காஜியில் டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷியிடம் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், கிராமப்புற பகுதிகளின் 18 இடங்களில் ஜாட் மற்றும் குஜ்ஜார் மக்கள் மீது கட்சி கவனம் செலுத்தியதைக் காட்டுகிறது.
சுனில் சோலங்கி இப்போது புதிய பா.ஜ.க அரசாங்கம் ஒரு ஏக்கருக்கு 53 லட்சம் ரூபாயில் இருந்து வட்ட வீதத்தை 5 கோடியாக உயர்த்தும், வீட்டு வரியை ரத்து செய்யும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட மனைகளின் உரிமையை வழங்கும், மற்றும் டெல்லி நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் பிரிவுகள் 33 மற்றும் 81ஐ ரத்து செய்யும் என்று நம்புகிறார்.
தனது பிரச்சார முறையைப் பற்றி, சுனில் சோலங்கி செய்தியுடன் மக்களைச் சென்றடைவது முக்கியமானது என்று கூறினார். “என்னிடம் ஐந்து வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன, அதில் டெல்லியின் கிராமங்களில் இருந்து சுமார் 5,000 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர அனைத்து 360 கிராமங்களுக்கும் சொந்தமாக வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. ஒரு மணி நேரத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஒரு செய்தி சென்றடையச் செய்ய முடியும்,'' என்றார்.