ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் : தலித், பழங்குடி மாணவர்களுக்கு கொலை களமா?

ஐந்து வருடங்களில் 49 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்…

Jawahar Navodaya Vidyalaya, NVS Recruitment 2019 Notification,

ரித்திகா சோப்ரா

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் (Jawahar Navodaya Vidyalaya), மத்திய அரசின் சார்பில், கிராமப்புற மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. 1985-86ல் இந்த பள்ளிகள் தொடங்கப்பட்டன.

இந்தியா முழுவதும், அதிக அளவில் தேர்ச்சி விகிதங்கள் மற்றும் தரமான கல்வியினை சி.பி.எஸ்.சி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வியினை அளிப்பதில் மிகவும் பெயர் பெற்ற பள்ளியாகும் இந்த பள்ளி.

இந்தியா முழுவதும் 635 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது இந்த பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

2013ம் ஆண்டில் இருந்து 2017ம் ஆண்டு வரை சுமார் 49 மாணவர்கள் இந்த பள்ளிகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெற்ற தகவல்கள் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் மற்றும் பழங்குடி இனத்தவர்கள். தற்கொலை செய்து கொண்டவர்களில் மாணவிகளை விட மாணவர்களே மிக அதிகமாக இருக்கின்றார்கள். 49 மாணவர்களில் 7 பேரைத் தவிர 42 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்கள். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் இறந்து போனவர்களின் உடல்களை பார்த்துள்ளனர்.

Jawahar Navodaya Vidyalaya, Navodaya Vidyalaya Samiti
நவதோயா பள்ளியின் அதிகாரப் பூர்வ இணைய தளம் நவோதயா வித்யாலயா சமிதி

ஊர்ப்புற மாணவர்களில் பலரின் வாழ்வினை மாற்றும் மிகப் பெரிய உந்து சக்தியாக விளங்கி வந்தது ஜவஹர் நவோதயா பள்ளிகள். 2012ம் ஆண்டில் இருந்து 10 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 99% ஆகும். 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95% அதிகம்.

Jawahar Navodaya Vidyalaya பள்ளியின் இட ஒதுக்கீடு மற்றும் மாணவர் சேர்க்கை

நவோதயா விதிமுறைகள் படி, 75% இட ஒதுக்கீடானது ஊர்ப்புற / கிராமப்புற மாணவர்களுக்கானது. நவதோயா எந்த ஒரு மாவட்டத்திலும் 100% இடத்தினை கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கியது கிடையாது.

6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்புகள் வரை இயங்கி வரும் இந்த பள்ளிகளில், 6ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையானது நுழைவுத் தேர்வு மூலம் தான் நடைபெறுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை செய்த 46 பள்ளிகளில் 41 பள்ளிகள் பெரிய அளவிலான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.

635 பள்ளிகளில் சுமார் 2.8 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மார்ச் 31,2017 அன்றைய நிலவரப்படி, 9ல் இருந்து 19 வயதிற்கு உட்பட்ட 2.53 லட்சம் மாணவர்கள் 600 பள்ளிகளில் படித்து வந்தனர். அதே வருடம் 14 பேர் அந்த வருடத்தில் உயிரிழந்துள்ளனர்.

தலித் & பழங்குடி மாணவர்களை கொல்லும் Jawahar Navodaya Vidyalaya

2017ம் ஆண்டில் ஒவ்வொரு லட்சத்திற்கும் 6 மாணவர்கள் என்ற விகிதாச்சாரத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2015ல் நடைபெற்ற தற்கொலை கணக்கீடுகளை விட இவை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தற்கொலை மதிப்பீடுகள் என்பது, மாணவர்களின் மொத்த எண்ணிக்கையை வைத்து கணிப்பது என்பது மிகவும் சுலபம். ஆனால், இந்த தற்கொலைகளை கூர்ந்து கவனித்தோமானால், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித்கள் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்.

2016ம் ஆண்டு 12 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 2017ம் ஆண்டு அது 14 ஆனது. கடந்த ஐந்து (2013-2017) வருடங்களில், 20 மாநிலங்களில் இருக்கும் 46 பள்ளிகளில், 49 தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், மற்றும் உத்திரகாண்ட் மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கைகள் அதிகமாக உள்ளன.

தற்கொலை செய்து கொண்டுவர்களில் 16 பேர் தலித் மாணவர்கள் ஆவார்கள். தலித் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என ஒட்டு மொத்தமாக 25 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஓ.பி.சியில் 12 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு

15% பேர் தலித் மாணவர்களுக்கு, பழங்குடியினருக்கு 7.5% இட ஒடதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், தலித் மற்றும் பழங்குடி மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, இங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

மார்ச் 31,2017 – தேதியின் படி 55% மாணவர்கள் ஓ.பி.சி கேட்டகிரியை சேர்ந்தவர்கள், 25% தலித் மாணவர்கள், 20% மாணவர்கள் பழங்குடியினர்.  ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 60:40 மாணவ மாணவியர் விகித்தாச்சாரம் அமைந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 35 நபர்கள் மாணவர்கள்.

49 தற்கொலைகளில், 6 தற்கொலைகளைத் தவிர 43 தற்கொலைகள், 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் செய்து கொண்டனர். அதிகப்படியாக 15 மாணவர்கள் 12ம் வகுப்பு படித்தவர்கள். 11 மாணவர்கள் – 11ம் வகுப்பு, 9 மாணவர்கள் – 9ம் வகுப்பு, 8 மாணவர்கள் – 10ம் வகுப்பு.

Jawahar Navodaya Vidyalaya, Navodaya Vidyalaya Samiti

49 மாணவர்களில் 42 பேர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 2 பேர் நீரில் மூழ்கியும், 2 பேர் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்தும், 3 பேர் ரயிலின் முன்பு பாய்ந்தும் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைகளை செய்து கொண்டவர்களின் உடல்களை கண்டறியும் மாணவர்களின் மனநிலையை தேற்றும் பொருட்டு, எங்கும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் தரப்படுவதில்லை.

தற்கொலைக்கான காரணங்கள்

குடும்பப் பிரச்சனைகள், ஆசிரியர்கள் தரும் மன அழுத்தம், படிப்பு சார்ந்த பிரச்சனைகள், நண்பர்களுடன் சண்டைகள் மற்றும் காதல் தோல்விகள் போன்ற பிரச்சனைகளால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஜனவரி, பிப்ரவரி, மற்றும் மார்ச் மாதங்களில் தான் மாணவர்கள் (தேர்வுகள் நெருங்கி வரும் காலங்களில்) தான் அதிகம் தற்கொலைகள் செய்து கொள்கின்றனர்.

கோடை காலத்தில் விடுமுறைக்கு வீடு சென்று திரும்பும் பிள்ளைகள், விடுதி வாழ்விற்கு தன்னை மாற்றிக் கொள்ள சிரமப்படுகிறார்கள். அந்த மன அழுத்தம் கூட சில நேரங்களில் தற்கொலைக்கு காராணமாகின்றன.  இரட்டை இலக்க எண்களில் தற்கொலைகள் நடக்கும் போது சுதாகரித்துக் கொண்ட நவோதயா எக்கோ சிஸ்டம்  11 பக்க அறிக்கை ஒன்றை 2016ல் வெளியிட்டது.

நவோதயா பள்ளி வளாகத்திற்குள் நடைபெறும் மரணங்கள் கண்டு, பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காமல் இருக்க இயலாது. எந்த ஒரு குழந்தையும், வெகு விரைவாக இப்படி ஒரு முடிவினை எடுத்துவிட இயலாது. ஆரம்ப காலத்தில் இருந்தே, அக்குழந்தைகள் மன அழுத்தத்தில் இருப்பதற்கான போதிய அறிகுறிகளை வெளியிட்டிருப்பார்கள்.

அதனை சரியாக கவனிக்க தவறிவிட்டது நவோதயா பள்ளிகள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கை வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றது. ஆனாலும் குழந்தைகளின் தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.

மேலும் படிக்க : ஐஐடியில் நவீன தீண்டாமை 

தமிழில் நித்யா பாண்டியன்

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jawahar navodaya vidyalaya students suicides 49 in 5 years half of them dalit and tribal students

Next Story
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் அட்டவணை வெளியானதுCBSE Class 12th Result, CBSE 12th Result 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express