Advertisment

ஜவஹர்லால் நேருவின் உத்வேகம் தரும் மேற்கோள்கள், குழந்தைகள் பற்றி நேருவின் எண்ணங்கள்

Jawaharlal Nehru Inspirational Quotes: நேரு என்கிற  தலைவரின் வார்த்தையையும், வாழ்க்கையையும் இந்த நாளில் கொண்டாடுவோம். உங்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jawaharlal Nehru quotes, Jawaharlal Nehru speech

Jawaharlal Nehru quotes, Jawaharlal Nehru speech

Jawaharlal Nehru Birth Anniversary : சச்சா நேரு என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு 1889 நவம்பர் 14 அன்று அலகாபாத்தில் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் நவம்பர் 14 ஐ குழந்தைகள் தினமாக இந்திய தேசம் கொண்டாடி வருகிறது .

Advertisment

ஐக்கிய நாடுககள் அவையின் 1954 ல் ஆண்டு முதல் சர்வதேச ஒற்றுமை, உலகளாவிய குழந்தைகளிடையே விழிப்புணர்வு, குழந்தைகளின் மேம்பாடு ஆகியவற்றை பிரதிபலிப்பதற்காக  நவம்பர் 20ம் தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறது.   இந்திய தேசமும் இந்நாளிலே பால் திவாஸ் என்ற பெயரில் குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தது.

இருப்பினும், 1964 - ம் ஆண்டில்  பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மரணத்திற்குப் பிறகு, குழந்தைகள் மீதான அவரது விருப்பத்தை நினைவுகூரும் வகையில்,  நவம்பர் 14ம் தேதி இந்தியாவின் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது . அப்போதிருந்து, நாடு முழுவதும், இந்த நாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கலாச்சார நிகழ்ச்சிகள், மற்றும் சிறப்பு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சில நேரங்களில், ஆசிரியர்களும் தங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த இதுபோன்ற நிகழ்வுகளில் குழந்தைகளோடு, குழந்தைகளாக  பங்கேற்கிறார்கள்.

“இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதத்தில் தான் நமது நாட்டின் எதிர்காலம்  தீர்மானிக்க்கப்படும் ”என்று பண்டிட் நேரு கூறியிருந்தார்.

இந்த வரிகளை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நேரு என்கிற  தலைவரின் வார்த்தையையும், வாழ்க்கையையும் இந்த நாளில் கொண்டாடுவோம். உங்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

publive-image மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக நாம், நமது உண்மைத் தன்மையை இழந்து விடக்கூடாது.

publive-image

publive-image ஒரு நிகழ்வைப் பற்றி அதிகம் பேச நினைக்கிறோம், அதை செயல்படுத்துவதை விட்டுவிட்டு.

publive-image குழந்தைகள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை யோசிப்பதில்லை.

publive-image இன்றைய குழந்தைகளிடம் இருந்து தான் நாளைய இந்தியா தீர்மானிக்கப்படுகிறது.

 

 

Jawaharlal Nehru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment