/tamil-ie/media/media_files/uploads/2023/02/Rajyasaba.jpg)
குடியரசுத் துணை தலைவர் ஜெக்தீப் தன்கரை நோக்கி ஜெயாபச்சன் கோபத்தில் விரலை நீட்டினார்.
ராஜ்ய சபா எம்.பி. ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபா தலைவர் ஜெக்தீப் தன்கரை நோக்கி கோபமாக் விரலை நீட்டிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவில், ஜெயா பச்சன் கோபத்துடன் குடியரசுத் துணை தலைவர் ஜெக்தீப் தன்கரை நோக்கி நடந்து செல்வதையும், அவரை நோக்கி கோபமாக விரலை நீட்டுவதையும் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் ‘உங்கள் இருக்கையில் போய் அமருங்கள்’ என்று சொல்வது திரும்பத் திரும்பக் கேட்கிறது.
जैसी पार्टी वैसे ही संस्कार... जया बच्चन जी कम से कम आप पद की तो गरिमा रख लेती.... pic.twitter.com/0kMlVtof2n
— Anuja Kapur (@anujakapurindia) February 12, 2023
ராஜ்ய சபா எம்.பி.யும் மூத்த நடிகையுமான ஜெயா பச்சன் ராஜ்ய சபா தலைவர் ஜெக்தீப் தன்கரை நோக்கி கோபமாக விரலை நீட்டும் வீடியோ, பா.ஜ.க-வின் கோபத்தை ஈர்த்துள்ளது. பா.ஜ.க தலைவர்கள் பலர் இந்த வீடியோவைப் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாடி கட்சி எம்.பி-யின் நடத்தை சங்கடமாக இருப்பதாக பா.ஜ.க தலைவர் அஜய் செராவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பா.ஜ.க தலைவரான அனுஜா கபூர் ட்விட்டரில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “அவர்கள்கட்சியைப் போல, கலாச்சாரத்தைப் போல… நடந்துகொண்டிருக்கிறார். ஜெயா பச்சன் நீங்கள் வகிக்கும் பதவியின் கண்ணியத்தையாவது காப்பாற்றியிருக்கலாம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ராஜ்ய சபா தலைவரின் உத்தரவை மீறியதற்காக காங்கிரஸ் ராஜ்ய சபா எம்.பி ரஜனி பாட்டீல் பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதம் உள்ள நாடகள் வரை இடைநீக்கம் செய்யப்பட்டார். ஜெயா பச்சன் காங்கிரஸ் எம்.பி.க்கு ஆதரவாக பேசியிருந்தார். என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us