scorecardresearch

ராகுல் யாத்திரை நிறைவு விழாவை புறக்கணிக்கும் ஜே.டி (யு); எதிர்க் கட்சிகள் ஒற்றுமைக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை

உ.பி.யில் உள்ள ஜே.டி.(யு) பிரிவு பாரத் ஜோடோ யாத்திரை மாநிலத்திற்குள் நுழைந்தபோது அதை வரவேற்றிருந்தாலும், அக்கட்சி பெரும்பாலும் யாத்திரையில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துள்ளது

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சார்பில் ஜே.டி.யு எம்.பி ராஜீவ் ரஞ்சன் சிங் ‘லாலன்’ ராகுல் நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். (பி.டி.ஐ/ கோப்பு படம்)
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சார்பில் ஜே.டி.யு எம்.பி ராஜீவ் ரஞ்சன் சிங் ‘லாலன்’ ராகுல் நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். (பி.டி.ஐ/ கோப்பு படம்)

Santosh Singh

தேசிய எதிர்கட்சி முயற்சிக்கு பின்னடைவாக பார்க்கும் வகையில், ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.(யு)) கூறியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஜே.டி.(யு) தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங்-க்கு நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: முதல்வர்களின் குடியரசு தின உரை: அரசியல் சாசனம், ஆளுனர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்

“நாட்டில் ஜனநாயக விழுமியங்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன என்பதிலும், கட்டுப்பாடற்ற நிறைவேற்று அதிகாரத்தின் மீதான கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டிய அரசியலமைப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன என்பதிலும் இருவேறு கருத்துக்கள் இல்லை. தேர்தல் ஜனநாயகத்தில் இருந்து தேர்தல் எதேச்சதிகாரமாக நாடு தன்னை மாற்றிக் கொள்ளும் வேகம், மிகச் சரியாகச் சொன்னால், பயமுறுத்துகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புகிறேன், அதே நாளில் நாகாலாந்தில் உள்ள வோகாவில் நடைபெறும் கட்சியின் தேர்தல் பிரச்சார தொடக்க நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால், என்னால் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்,” என்று மல்லிகார்ஜூன கார்கேவின் அழைப்புக்கு லாலன் சிங் பதிலளித்தார்.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

லாலன் சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சார்பில் நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.

“பாரத் ஜோடோ யாத்ரா மக்களின் மனநிலை மற்றும் கவலைகளை நேரடியாக தெரிந்துக் கொள்ளவும், அனுபவிக்கவும் மற்றும் உணரவும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது என்று நான் உண்மையாக நம்புகிறேன், இது வரவிருக்கின்ற 2024 மக்களவைத் தேர்தலுக்கு கூட்டு உத்திகளை வகுக்க நமக்கு உதவுவதில் நீண்ட தூரம் செல்லும் என்று நான் நம்புகிறேன்,” ​​என்று லாலன் சிங் கூறினார். மேலும், “தற்போதைய காலத்தின் தேவை ஒரு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்பதை எனது கட்சி உண்மையாக உணர்கிறது மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இந்த திசையில் சரியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறது,” என்றும் லாலன் சிங் கூறினார்.

பீகார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசித் நாத் திவாரி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது: “ஒரு காலத்தில் நாட்டைப் பிளவுபடுத்திய சிந்தனை செயல்முறைக்கு எதிரானது எங்கள் யாத்திரை. பிரிவினை அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த நாட்டை நேசிப்பவர்கள் எங்கள் பிரச்சாரத்தில் சேர வேண்டும்,” என்று கூறினார்.

உ.பி.யில் உள்ள ஜே.டி.(யு) பிரிவு பாரத் ஜோடோ யாத்திரை மாநிலத்திற்குள் நுழைந்தபோது அதை வரவேற்றிருந்தாலும், அக்கட்சி பெரும்பாலும் யாத்திரையில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துள்ளது. பீகார் முதல்வர் நிதீஷ் குமார் யாத்திரை பற்றி தெரியாததுபோல் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார், மேலும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இன்னும் உருவாகாத நிலையில், தேசிய எதிர்க்கட்சியை ஏலம் எடுப்பதற்கு அவர் ஒரு கடினமான பணியை எதிர்கொள்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Jdu bharat jodo yatra congresss concerns