JEE Advanced Result 2018, IIT JEE தேர்வு எழுதியவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ இணையதளமான jeeadv.ac.in. -ல் காணலாம்.
IIT JEE Advanced Result 2018 Live, நாடு முழுவதும் மத்திய அரசின் ஐஐடி உள்ளிட்ட உயர் தொழில் நுட்ப நிறுவனங்களில் பயில JEE நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. மேற்படி JEE Advanced Result 2018 இன்று வெளியாகிறது.
JEE Advanced Result 2018 இன்று காலை 10 மணிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு எழுதியவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான jeeadv.ac.in. -ல் மட்டுமல்லாமல், தாங்கள் பதிவு செய்த செல்போனிலும் எஸ்.எம்.எஸ். மூலமாக முடிவுகளை காணலாம்.
JEE Advanced Result 2018 LIVE UPDATES:: ஐஐடி ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் தொடர்பான லைவ் செய்திகள் இங்கே:
1:00 PM : ஐஐடி ஜே.இ.இ தேர்வு முடிவுகளில் மாணவிகளைவிட மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தம் தேர்வானவர்களில் 16,062 பேர் மாணவர்கள்! 2,076 பேர் மாணவிகள்!
தேர்வானவர்களில் பொதுப் பிரிவினர்: 8,794
ஓ.பி.சி. பிரிவினர்: 3,140
எஸ்.சி பிரிவினர்: 4,709
எஸ்.டி. பிரிவினர்: 1,495
11:30 AM : மண்டலம் வாரியாக டாப் ரேங்க் பெற்றவர்கள் விவரம்:
ஐஐடி ரூர்கி: பிரணவ் கோயல்-AIR-1 (அகில இந்திய ரேங்க் 1)
ஐஐடி டெல்லி: சகில் ஜெயின் (AIR 2)
ஐஐடி சென்னை: மவுரி சிவ கிருஷ்ண மனோகர் (AIR 5)
ஐஐடி காரக்பூர்: கே.வி.ஆர்.ஹேமந்த் குமார் சோடிபில்லி (AIR 7)
ஐஐடி மும்பை: ரிஷி அகர்வால் (AIR 8)
ஐஐடி கான்பூர்: ஆயுஷ் கடம் (AIR 78)
ஐஐடி கவுகாத்தி: பிரஷாந்த் குமார் (AIR 150)
11:00 AM : மொத்தம் இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேர் எழுதிய ஐஐடி ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் 2018 தேர்வில் 18,138 பேர் தகுதி பெற்றிருக்கிறார்கள். மாணவிகளில் மீனாள் பரக் 318 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பெற்றார். கொல்கத்தாவின் ஷகில் ஜெயின் அகில இந்திய அளவில் 2-வது இடத்தையும், டெல்லியின் கைலாஷ் குப்தா 3-வது ரேங்கையும் பெற்றனர்.
10:40 AM: ஒட்டுமொத்தமாக பிரணவ் கோயல் JEE Advanced 2018 முதலிடத்தைப் பெற்றார்.
10:30 AM: டெல்லி JEE Main topper சிமர்பிரீத் சிங் சலுஜா AIR 75 பெற்றிருக்கிறார். அவரது மதிப்பெண்கள் 279. இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -க்கு பேட்டியளித்த அவர், மும்பை ஐஐடி-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங் தேர்வு செய்யவிருப்பதாக கூறினார்.
Jee Advance 2018 Result Live: டெல்லி JEE Main topper சிமர்பிரீத் சிங் சலுஜா
10:10 AM: JEE Advanced 2018: Results பார்க்கும் முறை
1. மேற்கண்ட அதிகாரபூர்வ வெப்சைட்டில் நுழையவும்.
2. ‘ரிசல்ட்’ என குறிப்பிடப்பட்ட லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
3. அதில் தரப்பட்ட இடங்களில் உரிய விவரங்களை நிரப்பவும்.
4. பிறகு, submit பகுதியில் க்ளிக் செய்யவும்.
5. உங்கள் ரிசல்டை ஸ்கீரினில் பார்க்கலாம்.
10 AM: ஐஐடி ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் வெளியாகின. அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ரிசல்ட் வந்து சேரும்.