JEE Advanced toppers picking IIT-Bombay : மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட NIRF (National Institutional Ranking Framework) பட்டியலில், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்லூரி என்ற பெருமையை பெற்றுள்ளது ஐஐடி மெட்ராஸ். ஆனால் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெறும் மாணவர்களின் பெரும்பான்மை தேர்வானது ஐ.ஐ.டி. மும்பையாகவே உள்ளது.
இந்த வருடம் முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவர்களில் 64 பேர் ஐ.ஐ.டி. மும்பையை தேர்வு செய்துள்ளனர். 33 பேர் ஐஐடி டெல்லியை தேர்வு செய்துள்ளனர். ஒரே ஒருவர் மட்டுமே ஐஐடி சென்னையை தேர்வு செய்துள்ளார்.
கடந்த ஆண்டில் முதல் 50 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 47 பேர் ஐ.ஐ.டி. மும்பையையும், மீதம் உள்ள மூன்று பேர் டெல்லியின் ஐ.ஐ.டியையும் தேர்வு செய்துள்ளனர். முதல் 100 இடங்கள் என்று வரும் போது 59 நபர்கள் மும்பை ஐ.ஐ.டியையும், 30 பேர் டெல்லியில் உள்ள ஐ.ஐ.டியையும், 6 நபர்கள் மட்டுமே சென்னை ஐ.ஐ.டியும் கடந்த வருடம் தேர்வு செய்தனர்.
மேலும் படிக்க : தலை சிறந்த கல்லூரிகள் 2019 : பொறியியல், மருத்துவம் என பட்டியலில் இடம் பிடித்த தமிழக கல்லூரிகள்
முதல் 500 இடங்கள் என்ற கணக்கில் வைத்துக் கொண்டால், கடந்த வருடம் 130 மாணவர்கள் என்ற எண்ணிக்கையில் இருந்து இந்த வருடம் 147 மாணவர்கள் என்ற வளர்ச்சியை பெற்றுள்ளது ஐஐடி மும்பை. ஐஐடி டெல்லியை கடந்த வருடம் 109 மாணவர்கள் தேர்வு செய்தனர். இந்த வருடம் 142 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். ஐ.ஐ.டி மெட்ராஸை கடந்த முறை 50 மாணவர்கள் தேர்வு செய்தனர். இம்முறை 53 மாணவர்கள் தேர்வு செய்தனர்.
2014ம் ஆண்டில் அனைத்திந்திய அளவில் முதலிடம் பெற்றதால் ஐ.ஐ.டி பாம்பையை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். இருப்பினும் 2014 & 15 ஆண்டுகளில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்ற சித்ராங் முர்தியா மற்றும் சத்வத் ஜக்வானி போன்றோர்கள் ஐ.ஐ.டியை நிராகரித்துவிட்டு அமெரிக்காவில் மேற்படிப்பு அடித்து வருகின்றனர்.