ஜே.இ.இ. மெயின் தேர்வை பலமொழிகளில் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டம்; மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

NTA JEE Main 2020: தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரிசையில், ஜே.இ.இ மெயின் தேர்வை பல மொழிகளில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மனிதவள...

அர்னாப் மித்ரா
NTA JEE Main 2020:
 தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரிசையில், ஜே.இ.இ மெயின் தேர்வை பல மொழிகளில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி) நுழைவுத் தேர்வு நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமையுடன் (என்.டி.ஏ) ஆலோசித்து அனைத்து 22 பிராந்திய மொழிகளிலும் நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டு செயலாளர் ஆர்.சுப்ரமணியம் பேப்பரில் எழுதப்படும் நீட் தேர்வு போல இல்லாமல், ஜே.இ.இ மெயின் தேர்வு ஒரு கணினி அடிப்படையிலான தேர்வு. எனவே சில தொழில்நுட்ப வரம்புகள் உள்ளன. “ஜே.இ.இ மெயின் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு முறையின்படி நடைபெறுவதால் சில வரம்புகள் உள்ளன. அவை முதலில் கவனிக்கப்பட வேண்டும். பல மொழிகளில் ஜே.இ.இ மெயின் தேர்வை நடத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். செயல்படுத்துவதற்கு காலம் எடுக்கும்.” என்று சுப்ரமணியம் கூறினார். மேலும், 2021 -இல் இருந்து குஜராத்தியை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

இதனிடையே, குஜராத் மாநில வேண்டுகோளின் பேரில் குஜராத்தி மொழியில் ஜே.இ.இ மெயின் வினாத்தாளின் மொழிபெயர்ப்பு தொடர்கிறது என்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியது. வேறு எந்த தேசிய மொழியிலும் ஜே.இ.இ மெயின் வினாத்தாளை வழங்க வேறு எந்த மாநிலங்களும் என்.டி.ஏவை அணுகவில்லை.

இந்த தேர்வின் மூலம் அனைத்து மாநிலங்களும் தங்கள் பொறியியல் விண்ணப்பதாரர்களை அனுமதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜே.இ.இ. மெயின் தேர்வு 2013 தொடங்கப்பட்டது. இந்த கோரிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் 2013 இல் அனுப்பப்பட்டது. குஜராத் மட்டுமே மாநில பொறியியல் கல்லூரிகளில் தங்கள் விண்ணப்பதாரர்களை ஜே.இ.இ மெயின் மதிப்பெண் மூலம் சேர்க்க ஒப்புக்கொண்டது. ஜே.இ.இ மெயின் பேப்பரை குஜராத்தி மொழியில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதை செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேலும், 2014 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநில பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் விண்ணப்பதாரர்களை ஜே.இ.இ மெயின் தேர்வு மூலம் சேர்க்கவும் தேர்வு செய்தது. அவர்கள் வினாத்தாளை மராத்தி மற்றும் உருது மொழிகளில் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இருப்பினும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஜே.இ.இ மெயின் தேர்வு மொழி தொடர்பாக மொழிகளிடையே பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டினார். “பிராந்திய மொழிகளை ஜே.இ.இ.யின் தேர்வு மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு மாநிலங்களிலிருந்து முன்மொழிவுகளை மத்திய அரசு கோரியிருக்க வேண்டும்” என்று மம்தா செய்தியாளர்களிடம் கூறினார்.

மதிப்புமிக்க பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு பெங்காலி மொழியில் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, ஜே.இ.இ மெயின் தேர்வு நடைபெறும் மொழிகளில் ஒன்றாக குஜராத்தியை சேர்த்த அரசின் முடிவை பானர்ஜி கேள்வி எழுப்பினார். ““நான் குஜராத்தி மொழியை விரும்புகிறேன். ஆனால், பிற பிராந்திய மொழிகள் ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளன? அவர்களுக்கு ஏன் அநீதி இழைக்கப்படுகிறது? குஜராத்தி இருக்க வேண்டும் என்றால், பெங்காலி உட்பட அனைத்து பிராந்திய மொழிகளும் இருக்க வேண்டும். இந்த விவகாரம் கருனையுடன் முடிவு செய்யப்படாவிட்டால், இந்த அநீதியால் மற்ற பிராந்திய மொழிகளைப் பேசும் மக்களின் உணர்வுகள் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் வலுவான எதிர்ப்புக்கள் இருக்கும்”என்று மம்தா பானர்ஜி டுவிட் செய்துள்ளார்.

ஜே.இ.இ மெயின் தேர்வு மொழிகளில் வங்காளத்தை சேர்க்கக் கோரி அம்மாநிலம் புதன்கிழமை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவுறுத்தலின் பேரில், கல்வித் துறை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், “ஜே.இ.இ மெயின் தேர்வு மொழிகளில் ஒன்றாக வங்காள மொழி இருக்க வேண்டும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

ஜே.இ.இ 2020 அறிவிப்பின்படி, வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அமைந்திருக்கும். ஆனால், குஜராத்தி, டாமன், டையு, தாத்ரா, நாகர் ஹவேலி ஆகிய மத்திய அரசு நகரங்களில் ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் இருக்கும்.

முன்னதாக ஜே.இ.இ மெயின் தேர்வை நடத்திய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2014 இல் மராத்தி குஜராத்தி மற்றும் உருது மொழிகளை உள்ளடக்கி இருந்தது. ஆனால் உருது மற்றும் மராத்தியை 2016 இல் திரும்பப் பெற்றது.

என்.டி.ஏ ஒரு வருடத்தில் இரண்டு முறை ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஜனவரி 6-11 முதல், ஏப்ரல் தேர்வுகள் 2020 ஏப்ரல் 9 முதல் 13 வரை நடைபெறும்.

தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) ஒரு ஆண்டில் இரண்டு முறை ஜே.இ.இ. நுழைவுத் தேர்வை நடத்துகிறது. முதல் நுழைவுத்தேர்வு ஜனவரி 6-11 தேதிகளிலும் இரண்டாவது ஏப்பரல் மாத நுழைவுத் தேர்வு 2020 ஏப்ரல் 9 முதல் 13 வரை நடைபெறும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close