அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஒர்க்கர்ஸ் யூனியன் செயல்பட்டு வருகின்றது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2 பிளம்பர் பதவிகள் காலியாக இருந்தன.
இந்தப் பதவினை பிளம்பர் பிரிவில் 1993 முதல் பணியாற்றி வந்த எங்கள் சங்க உறுப்பினர் ராஜேந்திரன் 2015ஆம் ஆண்டு முதல் பொறுப்பு பிளம்பராக 2 பிளம்பர் பதவியும் சேர்த்து பார்த்து வருகிறார்.
அவர்களுக்கு பிளம்பராக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டது. ஆனால் அக்கோரிக்கையினை புறந்தள்ளிவிட்டு அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் வெளியிலிருந்து பிளம்பர் பதவியினை நிரப்புவதற்காக 2012ஆம் ஆண்டு அறிவிப்பு செய்தது.
இதனால் சங்கத்தின் சார்பில் புதுவை அரசு தொழிலாளர் சமரச அதிகாரியிடம் முறையிடப்பட்டது. அதில் நிர்வாகத்தின் சார்பில் மறுப்பு தெரிவிக்கவே தொழிலாளர் நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது.
தொழிலாளர் நீதிமன்றத்திலும் நிர்வாகத்தின் சார்பில் மறுப்பு தெரிவித்த நிலையில் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனித்து சங்க உறுப்பினர் ராஜேந்திரன் பிளம்பர் பதவி வழங்க வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டு பிறப்பித்தது.
ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் நீதிமன்ற ஆணையினை
செயல்படுத்தவில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி 2வது கூடுதல் நீதி மன்றத்தில் 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் மாவட்ட நீதிமன்றத்தில் சங்கத்தின் சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் எவ்வித உத்தரவினை பிறப்பிக்க கூடாது என்று அறியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து தள்ளுபடி செய்ய கேட்டுக் கொண்டது.
இது சம்பந்தமாக ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இவ்வழக்கினை 03.04.2023 அன்று தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் ஜீவானந்தம் ஆஜரான நிதிமன்றம் உத்தரவினை நிறைவேற்றாததற்கு ஜப்தி நடவடிக்கை கேட்டு வாதாடினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இளவரசன் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது ஜப்தி நடவடிக்கையினை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார் என சங்க நிர்வாகிகள் கடிதம் மூலம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை அமீனாக்கள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஆணையர் இல்லாத நிலையில் அலுவலக மேலாளர் மற்றும் பொறியாளர்களிடம சம்மன் அளித்தனர். பின்னர் அங்கு உள்ள ஜெனரேட்டர், கார், ஜீப், கம்யூட்டர், ஏசி ஆகியவற்றின் மீது பயன்படுத்தாதபடி நோட்டீஸ் ஒட்டப்பட்டு சென்றனர். இதனால் புதுச்சேரி அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.