scorecardresearch

டெல்லி ரகசியம்: ராஜ்யசபாவில் திடீரென ஒலித்த ‘My Lord’… பாஜக எம்.பி மன்னிப்பு!

சபைக்கு தலைமை தாங்கிய துணைத் தலைவர் ஹரிவன்ஷை, “My Lord” என அழைத்தார். உடனடியாக சுதாரித்து கொண்ட அவர், தனது தவறுக்கு மன்னிப்பு கோரினார்.

டெல்லி ரகசியம்: ராஜ்யசபாவில் திடீரென ஒலித்த ‘My Lord’… பாஜக எம்.பி மன்னிப்பு!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அவையில் தாக்கல் செய்த குற்றவியல் நடைமுறை மசோதா, 2022 குறித்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரத்தின் விமர்சனத்தை எதிர்த்து பாஜக மாநிலங்களவை எம்பியும், மூத்த வழக்கறிஞருமான மகேஷ் ஜெத்மலானி புதன்கிழமை பேச தொடங்கினார்.

அப்போது, சபைக்கு தலைமை தாங்கிய துணைத் தலைவர் ஹரிவன்ஷை, “My Lord” என அழைத்தார். உடனடியாக சுதாரித்து கொண்ட அவர், தனது தவறுக்கு மன்னிப்பு கோரினார். நீதிமன்றத்தில் பணிபுரிந்த போது ஏற்பட்ட பழைய பழக்கம் என விளக்கமளித்தார்.

மனுவை ஆராய செயற்கை நுண்ணறிவு

ஊழலைத் தடுக்க மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துகிறது என்று இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கூறியது பல உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பேசிய அவர், AI மூலம், ஒரு மனுவை ஆய்வு செய்து, “இன்னும் ஏதாவது” இருக்கிறதா என்று பார்க்க முடியும். வரிகளுக்கு இடையில் படிக்க முடியும் என்றார். அமைச்சரிடம் யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், சில எம்.பி.க்கள் பின்னர் இந்த தகவல் அமைச்சின் அதிகாரிகளுக்கு கூட புதுசாக இருக்கலாம் என்று கேலி செய்வதைக் கேட்க முடிந்தது.

பிறந்தநாள் விமர்சனம்

காங்கிரஸ் தலைவர் சசி தரூர் புதன்கிழமை பாஜக அரசியல் சாசனத்தின் ஒரு பக்கத்தை வெளியிட்டு, அதை கட்சி உண்மையிலேயே நம்புகிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஜக! உங்களுக்கு இன்று 42 வயதாகிறது. சொந்த அரசியலமைப்பின்படி வாழத் தொடங்குவதற்கான நேரம் இதுவல்லவா? முதல் பக்கத்தில் நீங்கள் உண்மையில் நம்புவது அல்லது நடைமுறைப்படுத்துவது எதுவுமே இல்லை. இந்த ஆவணம் கூட உங்கள் கட்டுக்கதை ஜம்லாக்களில் ஒன்றாக இருந்ததா? எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட அந்த பக்கத்தில், சோசலிசம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளில் உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கட்சி வைத்திருக்கும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Jethmalani calls rajya sabha speaker my lord