உத்தரப் பிரதேசம் ஜான்சியில் உள்ள அரசு நடத்தும் மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (என்.ஐ.சி.யு) கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட என்.ஐ.சி.யு பிரிவில் 18 குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து நடந்த அன்று அங்கே 49 பச்சிளம் குழந்தைகள் இருந்தனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அங்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் என்.எஸ்.செங்கர் கூறியதாவது, வேறு இடங்களில் சிகிச்சைக்கு அதிக செலவு இருப்பதால், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதனால் "எங்களிடம் வரும் அனைத்து குழந்தைகளுக்கும் நாங்கள் சிகிச்சை அளிக்க முயற்சிகிறோம்," என்று அவர் கூறினார்.
விதியின் கொடூரமான திருப்பத்தில், ஒரு புதிய 51 படுக்கைகள் கொண்ட NICU வார்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு மாதத்திற்குள் மருத்துவமைனைக்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று முதல்வர் கூறினார். "புதிய வார்டு அதிக திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
மேலும் மருத்துவ கல்லூரி முதல்வர் கூறுகையில், "தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான வழிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மருத்துவக் கல்லூரி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது, ஒவ்வொன்றும் ஒரு பேராசிரியரால் கண்காணிக்கப்பட்டது.
அனைத்து ஊழியர்களுக்கும் தீ விபத்தை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது, இது இந்த சம்பவத்தின் போது உதவியாக இருந்தது, ”என்று கூறினார். இந்த விபத்தின் போது பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றி தீயை அணைக்க முயன்றபோது, மேக்னா என்ற செவிலியர் காலில் தீக்காயம் ஏற்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Jhansi NICU where 10 newborns died was operating beyond capacity, new one was expected to open soon
தீ விபத்திற்குப் பிறகு ஜான்சிக்கு விரைந்த துணை முதல்வர் பிரஜேஷ் பதக், முழுமையான விசாரணையை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
மாஜிஸ்திரேட் விசாரணை தவிர, சுகாதாரத் துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய மூன்று நிலைகளில் விசாரணை நடத்தப்படும். தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“