ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான பீடித் தொழிலாளி, ஜீத்ராய் சமந்த். இவரது ஆதார் எண் தவறுதலாக அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுத்து செலவு செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் கவனக் குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த தவறு நடந்துள்ளது. அப்போது கொரோனா காலம் என்பதால் மத்திய அரசு பணம் அனுப்பியதாக நினைத்து சமந்த் செலவு செய்து வந்துள்ளளார். அவ்வூரில் உள்ள பொது சேவை மையம் மூலம் பணம் பற்றி அறிந்து செலவு செய்து வந்துள்ளளார்.
பிரதமர் பணம் அனுப்பினார்
இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஜார்க்கண்ட் ராஜ்ய கிராமின் வங்கி மேலாளருக்கு அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஸ்ரீமதி லகுரி என்ற பெண், தன் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போனதாக புகார் அளித்தார். இதையடுத்து மேலாளர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, தவறு நடந்ததைக் கண்டறிந்தார். சமந்த் குறித்து தெரிய வந்தது. அதன்படி சமந்த்திடம் அதிகாரிகள் முறையாக பணத்தை திருப்பி கொடுக்கும் படி கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து மாவட்ட முஃபசில் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 406, 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் சமந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து எஸ்,பி அசுதோஷ் சேகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "மார்ச் 24-ம் தேதி சமந்த் கைது செய்யப்பட்டார். அவரது ஆதார் எண் தவறுதலாக பெண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டது. ஆனால் அவர் பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார். அவர் இதற்காக சி.எஸ்.சி மையத்தில் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இந்த தவறு முன்கூட்டியே அறிய முடியவில்லை. பணம் குறித்து காவல்துறை சமந்த்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது தனக்கு பிரதமர் நரேந்திர மோடி பணம் அனுப்பியதாக நம்புவதாக அவர் கூறி பதில் கடிதம் அனுப்பினார்" என்றார்.
வங்கி மேலாளர் மணீஷ் குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், முன்பு பாங்க் ஆஃப் இந்தியா, கிராமின் வங்கிக்கு நிதியுதவி அளித்தது, இப்போது எஸ்.பி.ஐ அளித்து வருகிறது. எனவே வங்கியின் முழு தரவுகளும் ஏப்ரல் 2019 இல் எஸ்.பி.ஐ உடன் இணைக்கப்பட்டது. அப்போது அதற்கான நடைமுறையின் போது சமந்த்தின் ஆதார் எண் தவறுதலாக அப்பெண்ணின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் இதுகுறித்து முன்பே புகார்
செய்யவில்லை, அவ்வாறு செய்திருந்தால் எங்களுக்கு இதுகுறித்து தெரிந்திருக்கும். இதற்கு ஒரு வங்கி அதிகாரி தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டுவது கடினம் என்றார்.
பொய்யான தகவல்
இதுகுறித்து UIDAI அதிகாரி கூறுகையில், இது முற்றிலும் வங்கியின் தவறு. UIDAI-க்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்றார்.
டிசம்பர் மாதம் இதுகுறித்து சமந்த்திடம் கேட்டபோது, "கொரோனா முதல் லாக்டவுனின் போது, தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூலம் மக்கள் பணம் பெறுவார்கள் என்று ஒரு தகவல் எங்கள் கிராமம் முழுவதும் பரவியது. அதனால் மக்கள் எல்லோரும் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை அவ்வப்போது பார்த்து வந்தார்கள். அப்போது நான் ரீடிங் மெஷினில் கட்டை விரல் வைத்து பார்த்த போது ரூ.1,12,000 பேலன்ஸ் இருப்பதாக காட்டியது. நான் கிராமின் வங்கிக்கு விரைந்தேன், ஆனால் அங்கு பணம் எதுவும் வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு பணம் அனுப்பியிருக்கும்" என்று கூறினார்.
இருப்பினும் போலீசார் சமந்த் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்ததாக தெரிவித்தனர். 6 குழந்தைகளுக்கு தந்தையான சமந்த் கொரோனா ஊரடங்கின் போது நிதி நெருக்கடியில் இருந்த சமயத்தில் பணம் எடுத்ததாகவும், பணம் அரசாங்கத்திடமிருந்து வந்ததாக நம்பியதாகவும் அவர் கூறினார்.
சப்-இன்ஸ்பெக்டர் ரது ஓரான் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், "சம்ந்த்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்ட போதே அவர் விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. வங்கியில் தவறு நடந்துள்ளது தான். ஆனால் அது அவர் பணம் இல்லை என அறிந்து பணம் எடுக்காமல் இருந்திருக்க வேண்டும். அது ஒரு தார்மீகப் பொறுப்பாகும்" என்றார்.
தொழிலாளி சமந்த்தின் கணக்கில் முதலில் வெறும் ரூ.650 மட்டுமே இருந்தது. அதன்பின் அவர் ரூ.500 முதல் ரூ.5,000 என பணம் எடுத்து வந்துள்ளார். பணம் எடுக்கும் போதும் கூட வங்கி கணக்கு வைத்திருப்பவரின் பெயர் வரும். ஆனால் அவர் அதைப் புறக்கணித்து பணம் எடுத்து வந்துள்ளார் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.