/tamil-ie/media/media_files/uploads/2018/09/d269.jpg)
Jharkhand Man Washes BJP MP Nishikant Dubey's Feet
BJP Worker Washes MP Nishikant Dubey's Feet in Jharkhand: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவின் காலை, தொண்டர் ஒருவர் கழுவி அதே நீரைக் குடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோடா தொகுதியின் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கலந்து கொண்டார். அவர் உரையை முடித்து மேடையில் அமர்ந்தபோது, பாஜக தொண்டர் ஒருவர், அவரது கால்களை தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அந்த எம்.பி, தனது ஆதரவாளர்கள் தன் மீது வைத்துள்ள அன்பை எதிர்ப்பாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். ஒருநாள் அந்த தொண்டரின் பாதங்களை கழுவும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், குடிப்பாரா என்று தான் தெரியவில்லை!.
#WATCH BJP worker washes feet of BJP Godda MP Nishikant Dubey and drinks that water, at an event in Jharkhand's Godda (16.09.18) pic.twitter.com/J2YwazQDhg
— ANI (@ANI) September 17, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.