Advertisment

விசாரணைக்குப் பிறகு... ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தது இ.டி

ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் புதன்கிழமை இரவு சமர்ப்பித்தார்; அவரது விசுவாசியான சம்பை சோரன் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
Hemant Soren

ஹேமந்த் சோரன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் புதன்கிழமை இரவு சமர்ப்பித்தார்; அவரது விசுவாசியான சம்பை சோரன் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: After day of questioning, Jharkhand CM Hemant Soren arrested by ED

ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தலைவருமான ஹேமந்த் சோரன், நிலத்தின் உரிமை தொடர்பாக அமலாக்க இயக்குனரகத்தால் 7 மணி நேரத்துக்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். அவரது விசுவாசியும் மாநில போக்குவரத்து அமைச்சருமான சம்பை சோரன் முதல்வராக பதவியேற்கலாம் என்று ஆளும் கூட்டணி கூறியுள்ளது.

ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் கூறுகையில், “முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராக சம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்... அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் இருக்கிறார்கள்…” என்று கூறினார். ஜே.எம்.எம்  கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளாக உள்ளன.

புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இரண்டு மினி பேருந்துகள் முதல்வர் இல்லத்திற்குள் செல்வதைக் கண்டதில் இருந்து ஊகங்கள் பரவின. அரை மணி நேரம் கழித்து, தலைமைச் செயலாளர் எல். கியாங்கேட் மற்றும் டி.ஜி.பி அஜய் குமார் சிங் ஆகியோரும் அவரது இல்லத்துக்கு வந்தனர்.

அமலாக்கத்துறை இயக்குநரகம் ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தை சோதனை நடத்தியது அவரது கட்சி அவரது புகழைக் கெடுப்பதறாக வசைபாடுவது வரை ஹேமந்த் சோரனுக்கும் புலனாய்வு அமைப்புக்கும் இடையேயான நிகழ்வுகளின் போக்கு இருந்தது.

முன்னதாக புதன்கிழமை, ஜார்கண்ட் காவல்துறை மூத்த இ.டி அதிகாரிகளுக்கு எதிராக எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் அவரது வீட்டில் நடந்த சோதனைகள் தொடர்பாக ஹேமந்த் சோரனின் புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

பணமோசடி வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனுக்கு இ.டி சம்மன் அனுப்பி வருகிறது. மேலும், அவர் ஏஜென்சி முன் ஆஜராக பலமுறை மறுத்து வருகிறார்.

அவர் இதுவரை மூன்று முறை விசாரிக்கப்பட்டுள்ளார்: முதலாவதாக நவம்பர் 2021-ல் இ.டி-யின் சட்டவிரோத சுரங்க வழக்கில்வ் விசாரிக்கப்பட்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சம்மன்கள் - முறையே ஜனவரி 20 மற்றும் 31 ஆம் தேதிகளில் - ராஞ்சியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சாவி ரஞ்சனும் குற்றம் சாட்டப்பட்ட நிலத்தை சட்டவிரோதமாக விற்றது மற்றும் வாங்கியதன் மூலம் கிடைத்த குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரித்தது.

ஹேமந்த் சோரன் தனது போலீஸ் புகாரில்,  “தன்னையும் அவரது ஒட்டுமொத்த சமூகத்தையும் துன்புறுத்துவதற்கும் கேவலப்படுத்துவதற்கும் இ.டி தனது டெல்லி இல்லத்தில் சோதனை நடவடிக்கையை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஹேமந்த் சோரன் தனது புகாரில், இ.டி அதிகாரிகள் ஒரு காட்சியை உருவாக்கவும், பொது மக்களின் பார்வையில் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும் சோதனை நடத்தியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்ததாக எழுதியுள்ளார்.

டெல்லி இல்லத்தில் இருந்து பி.எம்.டபிள்.யூ கார் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக இ.டி-யின் உரிமைகோரல்களையும் அவர் நிவர்த்தி செய்தார்.  “நான் பி.எம்.டபிள்.யூ காரின் உரிமையாளர் அல்ல... எனக்கு எந்த சட்டவிரோத பணமும் இல்லை” என்று அவர் கூறினார்.  “மேற்கண்ட செயல்கள் பொதுவில் என்னை வேண்டுமென்றே அவமானப்படுத்தசெய்யப்பட்டவை” என்று ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jharkhand Cm Hemant Soren
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment