/tamil-ie/media/media_files/uploads/2019/12/a642.jpg)
News Today Live Updates
Jharkhand Election Results 2019 Updates: ஜார்க்கண்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், ஜார்க்க்கண்ட் தோல்வியும் பாஜக-வுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜ தலைமையில் முதல்வர் ரகுபர்தாஸ் ஆட்சி நடந்து வந்தது. சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் மூன்று கட்ட தேர்தல்கள் முறையே நவம்பர் 30, டிசம்பர் 7 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற்றது. நான்காவது கட்ட தேர்தல் கடந்த 16ம் தேதியும், 5வது கட்டமாக கடந்த 20ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட்டன. ஆளும் பாஜக தனியாக களம் இறங்கியது. 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இரவு 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றி இருந்தது. ஆளும் பாஜக 25 இடங்களையும் கைப்பற்றின. இதன் மூலம் அம்மாநிலத்தில் ஜேஎம்எம் - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.
இக்கூட்டணியின் சார்பில் முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் விரைவில் பதவியேற்கிறார்.
திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி...
மறுபுறம், ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி. இதில் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி ஆகியவை அடங்கும். காவியை பதவி நீக்கம் செய்து பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்றே தெரிகிறது. ஜார்க்கண்டில் இரட்டை இயந்திர அரசாங்கம் இருக்க வேண்டும் - டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஞ்சியில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் - இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரச்சாரமாக முன்னெடுத்தார்கள். இதற்கிடையில், ஜே.எம்.எம்-காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தை மையப்படுத்தி நடத்தியது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணி, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை பெறும் என எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Live Blog
Jharkhand Election Results 2019 Updates
ஜார்கண்ட் முதலமைச்சரும், பாஜக வேட்பாளருமான ரகுபார் தாஸ், சுயேச்சை வேட்பாளர் சாரியு ராய்க்கு எதிராக ஜாம்ஷெட்பூர் கிழக்கு பகுதியில் பின்னடைவை தொடர்ந்து வருகிறார். ஏ.என்.ஐ என்ற செய்தி நிறுவனத்தில் பேசுகையில், “இறுதி முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இறுதி முடிவுக்காக காத்திருக்கிறேன். மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ளும். ” என்றார்.
சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத், "பழங்குடியினரும், ஜார்க்கண்டின் ஏழை மக்களும் அமித் ஷா தலைமையிலான பாஜக கட்சியை நிராகரித்ததாகக் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் (சட்டமன்ற) வெற்றிபெற தீவிர செயலாற்றியதாக தெரிவித்தார்.
பாஜகவின் ஊழல் மற்றும் அதன் ஆணவம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக, ஜார்க்கண்ட் தேர்தலுக்கான காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் அஜய் சர்மா கூறினார். "பாஜக டிக்கெட் கொடுத்த ஊழல் வேட்பாளர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். காங்கிரஸ் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது, ஆனால் பாஜக இதை செய்ய தவறிவிட்டது” என்றார் அவர்.
பாஜக வேட்பாளரும் ஜார்கண்ட் முதலமைச்சருமான ரகுபார் தாஸ், ஜாம்ஷெட்பூர் (கிழக்கு) தொகுதியில் தன்னை எதிர்த்து நின்ற சுயேட்சை வேட்பாளர் சாரியு ராய்யிடம் பின்னடைவை சந்தித்திருக்கிறார். ரகுபார் 13,708 வாக்குகளையும், ராய் இதுவரை 14,479 வாக்குகளையும் பெற்றுள்ளார்கள். ஜார்கண்ட் முன்னாள் அமைச்சராக இருந்த ராய், ரகுபார் தாஸ் அமைச்சரவையிலிருந்து, பாஜகவிலிருந்தும் விலகியதால், அவர் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார்
"ஜார்கண்டில் எங்கள் கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். போக்குகள் நல்லவை, ஆனால் இறுதி முடிவு வரும் வரை நான் கருத்துத் தெரிவிக்க மாட்டேன். ஹேமந்த் சோரன் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம்" என்று காங்கிரசின் ஜார்க்கண்ட் இன்சார்ஜ் ஆர்.பி.என் சிங் கூறியுள்ளார்.
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் போக்குகளின் படி, ஆளும் பாஜகவை விட காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி முன்னணியில் இருப்பதால், கட்சித் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை விநியோகித்து கொண்டாடுகிறார்கள். "மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரணவ் ஜா காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து. 'இந்த போக்குகள் இறுதியல்ல. இன்னும் கூடுதல் எண்ணிக்கையிலான எண்ணிக்கைகள் நடைபெற உள்ளன. இப்போது இந்த போக்குகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. எல்லாம் முடிந்த பிறகு நான் ராஞ்சியில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன்’ என்றார்.
தற்போதைய முதல்வர் ரகுபார் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் 1,107 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இதற்கிடையில், பார்ஹெட்டில் முன்னிலை வகித்தபோதும், கிட்டத்தட்ட 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் லூயிஸுக்கு பின்னால், டும்கா தொகுதியில் பின் தங்கியுள்ளார் ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும். தேசிய பதவியில் இருக்கும் பாஜக, இன்னொரு பதவியைக் கைப்பற்ற இம்மாநிலத்தை வெல்ல வேண்டும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களை கட்சி இழந்துள்ளது, அதே நேரத்தில் ஹரியானாவில் எளிய பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. மே பொதுத் தேர்தலில் அடிபட்ட எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை, பாஜகவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மற்றொரு மாநிலம் அவற்றை ஊக்குவிக்கும்
முதல் கட்ட வாக்குப்பதிவில், மாநிலத்தின் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், அதற்கிடையே 62.87 ஓட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 64 சதவீதம் பேர் வாக்களித்தனர், மூன்றாம் மற்றும் நான்காவது கட்ட வாக்குப்பதிவில் தலா 62 சதவீதம் பேர் வாக்களித்தனர். ஜார்க்கண்டில் மீதமிருந்த 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இது 70.83 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us
Highlights