‘நான் பிரிட்டிஷ் கவர்னர் அல்ல; மக்களுக்கு சேவை செய்யும் இந்திய கவர்னர்’ : சி.பி ராதாகிருஷ்ணன்

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக முன்னாள் பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

CP Radhakrishnan

தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவராக இருந்த சி.பி ராதாகிருஷ்ணன் அண்மையில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநில தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு நேற்று (புதன்கிழமை) சென்று மக்களிடம் உரையாற்றினார். ஆளுநராக பதவியேற்றப் பின் முதல் முறையாக அங்குள்ள கிராமத்திற்கு சென்று கலந்துரையாடினார். அப்போது அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசும்போது மக்கள் ராஜ்பவனுக்குச் செல்லலாம் அல்லது செல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஆளுநர் மக்களிடம் செல்வார் என்று கூறினேன். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திகளுக்கு ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

  1. ஆளுநராக பதவியேற்றப் பின் முதல்முறையாக ஜார்க்கண்டில் ஒரு கிராமத்திற்கு சென்றுள்ளீர்கள். வருங்காலங்களிலும் இதுபோன்று செல்வதற்கான திட்டங்கள் உள்ளதா?

மாதம் 10 நாட்கள் கிராமங்களுக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். இங்கு 4,354 பஞ்சாயத்துகள் உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் சென்று வருவேன்.

  1. நீங்கள் கவனம் செலுத்த விரும்பும் மற்றும் மாற்றங்களைக் காண விரும்பும் ஒரு துறை எது?

எனது முதல் நோக்கம் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை ஊக்குவிப்பதாகும். கல்வியால் மட்டுமே மக்களின் மனநிலையை மாற்ற முடியும். மாணவர்கள் அனைவரும் பள்ளி செல்ல வேண்டும். இடை நிற்றலை தடுக்க வேண்டும். ஜார்க்கண்ட் மக்களுக்கு கல்வி, உலகத்துடன் தாங்கள் போட்டி போடும் நம்பிக்கையை அளிக்கும். இரண்டாவது முன்னுரிமை சுகாதாரம், பின்னர் வீடு. கல்வி வசதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன்.

  1. இப்போது நீங்கள் காசிபூருக்கு வந்துள்ளீர்கள். இங்குள்ள நல்ல விஷயம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எந்தெந்த பகுதிகளில் முன்னேற்றம் தேவை?

இங்குள்ள மக்கள் மூங்கில் கலையில் மிகவும் சிறந்தவர்களாக உள்ளனர். இதை ஊக்குவித்து, அதன் செயல்திறனை மேலும் மேம்படுத்தலாம். மக்களின் மன உறுதி உயர்த்த வேண்டும். கிராமத்தைப் பற்றிய ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இங்குள்ள மக்கள்
மக்கள் மற்றவர்களிடம் மிகவும் நெருக்கமாகவும் பாசமாகவும் இருக்கிறார்கள்.

  1. ஒரு சில மாநிலங்களில் நிலவும் மத்திய- மாநில உறவுகளில் விரிசல் குறித்து உங்கள் பார்வை என்ன?

பிரதமர் நரேந்திர மோடியும், குடியரசுத் தலைவரும் என்னை ராஞ்சியில் அமர்ந்து ஜார்க்கண்டை ஆட்சி செய்ய அனுப்பவில்லை. என்னை ஆளுநராக்கி உள்ளனர். மக்களுக்கு சேவை செய்யவே இங்கு வந்துள்ளேன். நான் இங்கு ஆட்சி செய்ய பிரிட்டிஷ் கவர்னர் அல்ல. மக்களுக்கு சேவை செய்யும் இந்திய கவர்னர் என்று கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Jharkhand governor cp radhakrishnan spoke to the indian express

Exit mobile version