/tamil-ie/media/media_files/uploads/2022/08/seema-patra-bjp-fb.jpg)
சீமா பத்ரா, நடுவில் இருப்பவர்
Jharkhand: Suspended BJP leader Seema Patra arrested for ‘abusing’ house help: தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் பா.ஜ.க தலைவர் சீமா பத்ரா, தனது வீட்டுப் பணியாளரை உடல்ரீதியாக சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ஜார்க்கண்டில் பா.ஜ.க.,வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த சீமா பத்ரா, செவ்வாய்க்கிழமை கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி.
இதையும் படியுங்கள்: போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபடும் பழக்கம் உள்ளவர்களுக்கு தடுப்புக் காவல் – பினராயி விஜயன்
வீட்டு உதவியாளரான சுனிதா, தனக்கு நேர்ந்த துயரத்தை விவரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, சீமா பத்ரா மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐ.பி.சி.,யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆர்கோரா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சீமா பத்ரா, தான் இந்த வழக்கில் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
#WATCH | Ranchi, Jharkhand: "These are false allegations, politically motivated allegations. I have been implicated," says suspended BJP leader and wife of an ex-IAS officer, Seema Patra who has been accused of torturing her domestic help.
— ANI (@ANI) August 31, 2022
She has been arrested by the Police. pic.twitter.com/9PRSiBm0fO
ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் செவ்வாய்க்கிழமை டி.ஜி.பி.,யிடம் இந்த சம்பவம் குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார், அதே நேரத்தில் காவல்துறையின் "செயலற்ற தன்மைக்கு" கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராஞ்சியில் உள்ள அசோக் நகரில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி சீமா பத்ரா, தனது வீட்டு பணிப்பெண்ணை உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக டி.ஜி.பி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது. இது ஒரு பாரதூரமான பிரச்சனை... பலமு மாவட்டத்தில், பாண்டு காவல் நிலையத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட சமூகம் 50 தலித்துகளை அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றியது கவலையளிக்கிறது," என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கின் எஃப்.ஐ.ஆர் படி, புகார்தாரர் விவேக் ஆனந்த் பாஸ்கி, ஒரு அரசு ஊழியர், சீமா பத்ராவின் மகன் ஆயுஷ்மானிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றார், இது வீட்டில் வீட்டு உதவியாளருக்கு எதிராக நடக்கும் உடல்ரீதியான வன்முறையை விவரிக்கிறது.
காயங்களுடன் வீட்டு உதவியாளரின் படங்களையும் ஆயுஷ்மான் காட்டியதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்பவரின் உடல் ரீதியான சித்திரவதை குறித்து புகார் செய்யத் தொடங்கியபோது, சீமா பத்ரா தனது மகனை மனநல மையத்தில் சேர்த்ததாக எஃப்ஐஆர் கூறுகிறது. "காவல்துறையின் உதவியுடன், மகன் ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் தனது தாயிடம் கூச்சலிட்டார்: 'நீங்கள் அவளை <வீட்டு உதவியாளர்> அவளது சிறுநீரை குடிக்க வைத்தீர்கள். நீங்கள் எப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற நபர், ”என்று எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.
கும்லாவிலிருந்து வரும் வீட்டு உதவியாளர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பத்ராவின் வீட்டில் உதவியாளராக சேர்ந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.