கத்தியைக் காட்டி மிரட்டி, உதைத்து, அடித்து பலாத்காரம் செய்தனர்- மார்ச் 1 அன்று ஜார்கண்டின் தும்காவில் ஏழு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஸ்பானிஷ் டிராவல் விலாகர், காவல்துறையில் அளித்த புகாரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முழு சம்பவம் இரண்டரை மணி நேரம் நீடித்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதான சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காடுகள் நிறைந்த மலைப்பாங்கான பகுதியில் பெண்ணும் அவரது கணவரும் கூடாரம் போட்டிருந்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரது வாக்குமூலம் மார்ச் 2 ஆம் தேதி அதிகாலை 2.05 மணிக்கு சமூக சுகாதார மையத்தில் பதிவு செய்யப்பட்டது, மேலும் IPC பிரிவுகள் 376D (கூட்டு பலாத்காரம்) மற்றும் 395 (கொடூரம்) ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டது.
முதலில், மூன்று ஆண்கள் அவரது கணவருடன் தகராறு செய்யத் தொடங்கினர், அவரைத் தாக்கி கைகளைக் கட்டினர் என்று எஃப்ஐஆர் கூறுகிறது. மற்ற நால்வரும் கத்தியைக் காட்டி மிரட்டி என்னை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். ஏழு பேரும் தன்னை தரையில் வீசியதாகவும், உதைத்து, குத்தியதாகவும், பலமுறை கற்பழித்தனர்.
“அனைவரும் சற்று குடிபோதையில் இருந்ததாகத் தோன்றியது. இந்த சம்பவம் சுமார் இரவு 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்தது” என்று எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.
இந்த தம்பதி மோட்டார் சைக்கிள்களில் உலக சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டு பாகிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதியில் இந்தியாவிற்குள் வந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, இலங்கையில் சிறிது காலம் தங்கியிருந்த தம்பதியினர், மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்ததாக எஃப்ஐஆர் கூறுகிறது.
“எங்கள் பயணத்தின் போது, நாங்கள் தும்கா கும்ராஹத் கிராமத்தை அடைந்தோம்… மிகவும் தாமதமாகிவிட்டதால், அருகிலுள்ள காடுகள் நிறைந்த மலைப்பாதையில் இரவு தங்குவதற்காக எங்கள் தற்காலிக கூடாரத்தை இரவில் அமைக்க முடிவு செய்தோம்.
இரவு 7 மணியளவில், நாங்கள் எங்கள் கூடாரத்திற்குள் இருந்தபோது, சந்தேகம் படும்படி சில குரல்கள் கேட்டன. கூடாரத்தை விட்டு வெளியே வந்தவுடனே இரண்டு பேர் போனில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். இரவு 7.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சிலர் வந்தனர். கூடாரத்தில் நின்று ‘ஹலோ ஃப்ரெண்ட்ஸ்’ என்று முணுமுணுத்தார்கள்.
நாங்கள் எங்கள் ஹெட் டார்ச் ஆன் செய்துவிட்டு கூடாரத்தை விட்டு வெளியே வந்தோம், ஐந்து பேர் எங்களை நோக்கி வேகமாக வருவதையும், மேலும் இரண்டு பேர் எங்கள் கூடாரத்தை நோக்கி செல்வதையும் பார்த்தோம். அவர்கள் உள்ளூர் மொழியில் பேசிக்கொண்டிருந்தனர், இடையில் சில ஆங்கில வார்த்தைகளையும் பயன்படுத்தினர்” என்று எஃப்ஐஆர் குறிப்பிடுகிறது.
சுவிஸ் கத்தி, கைக்கடிகாரம், வைரம் பொறித்த பிளாட்டினம் மோதிரம், வெள்ளி மோதிரம், இயர்பாட், பர்ஸ், கிரெடிட் கார்டு, சுமார் ரூ.11,000, 300 அமெரிக்க டாலர்கள், ஒரு ஸ்டீல் ஸ்பூன் மற்றும் ஒரு ஃபோர்க் ஆகிய பொருட்களையும் ஏழு பேரும் பறித்துச் சென்றதாக எஃப்ஐஆர் கூறுகிறது.
"அவர்களில் ஒருவர் 28-30 வயதுடையவர், வெள்ளை ஸ்கார்ஃப் மற்றும் வெள்ளை டி-சர்ட் அணிந்திருந்தார், மற்றவர்கள் இளைஞர்கள், சம்பவம் நடந்த பிறகு, அவர்கள் கிராமத்தை நோக்கி ஓடிவிட்டனர்".
சம்பவத்திற்குப் பிறகு, நாங்கள் எங்கள் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு எப்படியோ பிரதான சாலைக்கு வந்தோம். இரவு 11 மணியளவில், ஹன்ஸ்திஹா காவல்துறையின் இரவு ரோந்துக் குழுவினர் எங்களைப் பார்த்து உதவிக்கு வந்தனர் என்று FIR கூறுகிறது. இருவரும் ஆரம்ப மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள சமூக நல மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், தும்காவில், போலீசார் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர், அங்கு அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தனர். கணவன், மனைவி செவ்வாய்க்கிழமை மாநிலத்தை விட்டு வெளியேறினர்.
Read in English: Threatened with dagger, kicked, punched: Spanish vlogger raped in Jharkhand in police complaint
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.