மோடியை யாரும் இப்படி கலாய்த்து இருக்க மாட்டார்கள்..அப்படி என்ன சொன்னார் ஜிக்னேஷ் மேவானி!

கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் அவருக்கு இந்நாளில் வாழ்த்து தெரிவியுங்கள்

குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியை குறித்து பதிவிட்ட ட்வீட் ஒன்று இந்திய அளவில்  ட்ரெண்ட் அடித்து  வருகிறது.

மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருபவர் தான் குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி. மோடி, பாஜக தலைவர்களான யோகி ஆதித்யநாத், அமிஷ்தா போன்றோரை ஜிக்னேஷ் கடுமையாக சாடி  பதிவிடும் கருத்திற்கு ஏராளமான எதிர்ப்புகள் மற்றும்  ஆதரவுவுகளும் இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்றைய (27.3.18) தினம், சர்வதேச திரையரங்கு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்தாளிற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி என்று, ஜிக்னேஷ் மேவானி ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “ நரேந்திர மோடிக்கு உலகத் திரையரங்கு நாள் வாழ்த்துகள். இன்றுவரை, இந்தியாவில் மோடியைப் போன்ற தலைசிறந்த நடிகரைப் பார்த்ததில்லை. அவரின் நடிப்புத் திறமை அற்புதமானது. குஜராத் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் அவருக்கு இந்நாளில் வாழ்த்து தெரிவியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிக்னேஷின் இந்த பதிவு ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட்யாகி வருகிறது. அதே போல்,  மோடியை நடிகர் என்று அவர் குறிப்பிட்டுருப்பது பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.   பாஜக.,விற்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும் பல்வேறு இடங்களில் குரல் கொடுத்த ஜிக்னேஷூக்கு மக்கள் தரப்பில் ஆதரவு இருமடங்காக உயர்ந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கீடு வேண்டும் என பல போராட்டங்களை நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஜிக்னேஷ் துணிச்சலுடன் இதுப் போன்ற கருத்துக்களை பதிவிடுவது மூத்த அரசியல் தலைவர்களையும் திகைக்க வைத்துள்ளது.

 

×Close
×Close