Advertisment

மணிப்பூர் கலவரம்: பா.ஜ.க தலைவர்கள் வீடுகளில் போராட்டக்காரர்கள் தாக்குதல் - பைரன் சிங்கின் வீட்டை முற்றுகையிட முயற்சி

மணிப்பூரில் காணாமல் போன மெய்தேய் இன பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து, ஊரடங்கு விதிக்கப்பட்டு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Manipur issue

மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டத்தில் தொடங்கிய வன்முறை, தலைநகர் இம்பால் வரை தாக்கத்தை ஏற்படுத்தி, நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.

Advertisment

கடந்த திங்கள் கிழமையன்று மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டத்தில் இருந்து, காணாமல் போனதாக கருதப்பட்ட மெய்தேய் இன பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து இம்பாலில் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஏராளமான போராட்டக்காரர்கள் அரசியல் தலைவர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Mob vandalises homes of BJP leaders, tries to storm Biren Singh’s residence as Jiribam anger spills to capital Imphal

 

குறிப்பாக, பா.ஜ.க தலைவர்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் தாக்கி வருகின்றனர். முதலமைச்சர் பைரன் சிங் மருமகனின் வீடுகள் மற்றும் கார்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதேபோல், பா.ஜ.க தலைவர்களுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

நேற்று இரவு இம்பாலின் ஹீங்காங்கில் உள்ள முதலமைச்சர் பைரன் சிங்கின் வீட்டை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயன்றனர். அப்போது, முதலமைச்சர் வீட்டில் இல்லாத நிலையில், கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கலைத்தனர்.

கடந்த இரண்டு நாள்களாக இம்பாலின் கிழக்கு மற்றும் மேற்கு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அதிகப்படியாக பாதிக்கப்பட்டதில் 5 மாவட்டங்களில் மெய்தேய் இன மக்களும், இரண்டு மாவட்டங்களி குகி இன மக்களும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

கே. ரகுமணி சிங், சபம் நிஷிகாந்தா மற்றும் கே. ஜாய்கிசன் சிங் ஆகியோரின் வீடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை எறிந்து தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். வன்முறையை அடக்க பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

"அரசியல்வாதிகள் மக்களைத் ஏமாற்றிவிட்டனர். அப்பாவி பொதுமக்களின் உயிரைக் காக்கத் தவறிய அவர்கள் பதவிகளில் இருக்க தகுதியற்றவர்கள்" என போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபில்ஸ் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும், வன்முறையை அடக்க முயன்றதில் 8 பேர் காயமடைந்ததாகவும் மணிப்பூர் போலீசார் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், காவல் நிலையத்தில் இருந்த மெய்தேய் நிவாரண முகாம் மீது தாக்குதல் நடத்திய 10 பேர் மீது சி.ஆர்.பி.ர்ஃப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத் தொடர்ந்து முகாம்களில் இருந்து காணாமல் போனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

“மோதலில் இரு சமூகங்ளைச் சேர்ந்தவர்களும் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டனர். இவை உயிரிழப்புக்கு வழிவகுத்தது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என அறிக்கை அளிக்கப்பட்டது.

இது தொடர்பான முக்கிய வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்குமாறு மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.

மணிப்பூர் அரசு, உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், மாநிலத்தில் உள்ள ஆறு காவல் நிலையங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை திரும்பப் பெறுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, நிலைமை கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், மறு உத்தரவு வரும் வரை தங்கள் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment