ஆப்பிள் விற்பனை சீசன் : ஜம்மு-காஷ்மீர் மக்களின் கோரிக்கை என்ன ?

.காஷ்மீர் மக்கள் இடைத்தரகர் மூலம் நடத்தப்படும் இந்த பழைய வர்த்தக இணைப்பிற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் ஆப்பிள்களை ஏற்றி செல்லும் டிரக்  ஓட்டுநர்  இரண்டு நாட்களுக்கு முன்பு போராளிகளால் சுடப்பட்டார். இதனால் , அங்கு ஆப்பிள்களை ஏற்றி செல்லும் லாரிகளின் இயக்கம் மந்தமாகியுள்ளது . ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீர்  மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து , அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததற்கு பின்பு ஆப்பிள் வர்த்தகத்தில் ஈடுபடுவர்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலாக கருதப்படுகிறது.

தற்போது ஆப்பிள் அருவடை உச்சத்தில் இருந்தாலும், ஆப்பீள் வர்த்தகர்கள் மற்றும் சிறு விவசாயிகள் தங்களுக்கு வரும் பேரபாயாத்தை நினைத்து அஞ்சுகின்றனர். மத்திய அரசு எடுத்த அசாதாரண முடிவுக்கு தங்களின் வாழ்வு விளையாக்கப்பட்டுளது என்றும் கருதிகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் கமிஷனர் சவுத்ரி முகமது யாசின் இது குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதளில் தெரிவிக்கையில், “ இன்றைய சூழ்நிலையில் லாரிகளின் இயக்கம் மந்தமாகத்தான் காணப்படுகிறது. இருந்தாலும், லாரிகள் ஓடும் பாதைகளில் நாங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறோம்,” என்று தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 23 முதல், ஷோபியன் என்ற மாவட்டத்தில் ஆப்பிள் பருவம் தொடங்கியது. சுமார் 4,200 லாரிகளின் மூலம் 1,83,000 கிலோ ஆப்பிள்களை மாவட்டத்திற்கு வெளியே கொண்டு சென்றுள்ளன (தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு இந்தியா லிமிடெட்   கொள்முதல் செய்ததையும் சேர்த்து) . ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையின் படி 40 சதவீத ஆப்பிள்கள் மட்டுமே ஷோபியன் சந்தைக்கு வந்துள்ளது.  இன்னும், ஒரு படி மேலே சென்று சொன்னால், புல்வாமாவில் வெறும் 10 சதவீத ஆப்பிள்கள் மட்டுமே  ஏலத்திற்கு வந்திருக்கின்றன.

மீதுமுள்ள ஆப்பிள்கள் எல்லாம் நேர்த்தியான வர்த்தக பாதையின் மூலமாக  பெங்களூர் வரை பயணிக்கின்றன.  இடைத்தரகர்கள் மூலம் காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகளும், இந்தியாவில் உள்ள பெரிய வணிகங்கள் இணைக்கப்படுகிறது . லாரிகளின் மூலம் காஷ்மீர் ஆப்பிள் இந்தியா முழுவதும் நகர்த்தப்படுகிறது.

ஜம்மு & காஷ்மீர் பிரிவு 370 ‘அகற்றப்பட்டது’ – அதை எப்படி புரிந்துக் கொள்வது?

இடைத்தரகர்களால் நடத்தப்படும் இந்த வர்த்தக இணைப்புகள் ஜம்மு- காஷ்மீர் பொறுத்த வரையில் மிகவும் முக்கியமானவை. இதை சான்றோடு விளக்க வேண்டும் என்றால், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு இந்தியா லிமிடெட்  (நாஃபெட்) அதிக விலைக்கு ஆப்பிள்களை வாங்குவதாக  அறிவித்தாலும், அந்த அறிவிப்பு காஷ்மீர் மக்களிடம் எந்த வரவேற்பையும் பெறவில்லை. காஷ்மீர் மக்கள் இடைத்தரகர் மூலம் நடத்தப்படும் பழைய வர்த்தக இணைப்பிற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

அக்டோபர் 8 ம் தேதி ஜே & கே அரசாங்கம் ஆப்பிள்களுக்கான கொள்முதல் விலையை முன்பு வழங்கியதை விட ஒரு கிலோகிராமிற்கு  ரூ .5 முதல் ரூ .10 வரை  அதிகமாக வழங்குவதாக அறிவித்து இருந்தது  . மேலும், “சூப்பர் கிளாஸ்” என்று சில குறிப்பிட்ட ஆப்பிள்ளை அடையாளப்படுத்தி, அதற்கு ரூ .70  லொள்முதல் விலை என்றும் நிர்ணயித்து இருந்தது.

ஷோபியன் ஆப்பிள் ஜம்மு-காஷ்மீரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  காஷ்மீரின் உற்பத்தியாகும் 15 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள்களில், 4 லட்சம் மெட்ரிக் டன்  ஷோபியன் மாவட்ட ஆப்பிள்கள் பங்களிக்கின்றன. ஷோபியன் ஆப்பிளில் , நீரின் அளவு குறைவாக இருப்பதாலும், நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதாலும்,  ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இதற்கான தேவை என்றுமே அதிகம்.

ஆண்டாண்டு காலமாக ஒரு நேர்த்தியான வர்த்தக பாதையின் மூலம், காஷ்மீரின் ஷோபிய ஆப்பிள் ஜம்மு-காஷ்மீருக்கும் இந்தியாவிலுள்ள மற்ற பகுதிகளுக்கும் இருந்த வர்த்தக இணைப்பு, கலாச்சார உரையாடல் எல்லாம் மத்திய அரசின் நடவடிக்கையால் துண்டாகியுள்ளது என்றே கருதப்படுகிறது. இந்தியாவோடு ஜம்மு -காஷ்மீரை ஒன்றாய் இணைக்கிறேன், என்ற அவர்கள் எடுத்த இந்த அசாதாரண முடிவால், ஏற்கனவே இந்தியாவில் இருந்த மற்ற பகுதிகளுக்கான வர்த்தக இணைப்பு துண்டித்து விடுவதாய் அம்மக்கள் கருதிகின்றனர்.

ஷோபியனில்  வாழும், ஃபாரூக் வாணி என்ற  ஆப்பிள் விவசாயி இது குறித்து கூறுகையில், “அரசாங்கம் கொள்முதல் விலையை அதிகப்படுத்தியிருந்தாலும் , நாங்கள் அரசாங்கத்திடம் ஆப்பிளை விற்க மாட்டோம். இந்தியா முழுவதும் பரவியிருக்கும்  சிறு வியாபாரிகளிடம் தான் நாங்கள் விற்போம். இது காலம் காலமாக நடந்து வருகிறது. என்னதான் அபாயம் இருந்தாலும், ஆப்பிள் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைமைக்கு  வரவேண்டும் “என்றார்.

ஜம்மு – காஷ்மீரின் தோட்டக்கலை இயக்குனராக இருக்கும்    அஜாஸ் பட் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’  நாளிதழுக்கு தெரிவிக்கையில் , “ ஆப்பிள்களை அரசு கொள்முதல் திட்டத்திற்கான வரவேற்பு நன்றாக உள்ளது. அனந்த்நாக், ஸ்ரீநகர், சோப்பூர் மற்றும் ஷோபியான் ஆகிய நான்கு மண்டலங்களிலிருந்து  இதுவரை, 1 லட்சம் பெட்டிகளை நாங்கள் கொள்முதல் செய்துள்ளோம். எப்போதும் வழங்கப்படாத வகையில், ஒரு கிலோவிற்கு  ரூ .70  வரைத் தருகிறோம்”  என்று கூறினார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close