ஜம்முவில் 43, காஷ்மீரில் 47 சட்டமன்ற தொகுதிகள்; எல்லை நிர்ணய ஆணையம் அறிவிப்பு

ஜம்மு & காஷ்மீர் எல்லை மறுவரையறை அறிவிப்பு; ஐம்முவில் 43 சட்டமன்ற தொகுதிகளும், காஷ்மீரில் 47 சட்டமன்ற தொகுதிகளும் அறிவிப்பு; எஸ்டி பிரிவினருக்கு 8 இடங்கள் ஒதுக்கீடு

ஜம்முவில் 43, காஷ்மீரில் 47 சட்டமன்ற தொகுதிகள்; எல்லை நிர்ணய ஆணையம் அறிவிப்பு

Anisha Dutta

J&K Delimitation Commission issues final notification, reserves 43 Assembly seats for Jammu, 47 for Kashmir: ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணியை மேற்கொண்ட எல்லை மறுவரையறை ஆணையம் வியாழன் அன்று கூடி ஜம்மு & காஷ்மீருக்கான எல்லை மறுவரையறையை இறுதி செய்தது. முதன்முறையாக எஸ்டி பிரிவினருக்கு (பழங்குடியினருக்கு) ஒன்பது இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளும் சம எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் வகையில் மறுவரையறையை ஆணையம் செய்துள்ளது.

இதற்கான அரசாணையும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இறுதி எல்லை நிர்ணய ஆணையின்படி, எல்லை நிர்ணயச் சட்டம் 9(1)(a) 2002 மற்றும் ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 இன் பிரிவு 60(2)(b)விதிகளின்படி, இப்பகுதியில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில், 43 ஜம்மு பிராந்தியத்திலும், 47 காஷ்மீர் பிராந்தியத்திலும் இருக்கும்.

அசோசியேட் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், குடிமக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களுடன் கலந்தாலோசித்த பிறகு, ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் எஸ்டிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன, அவற்றில் 6 ஜம்மு பிராந்தியத்திலும், 3 காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் உள்ளன.

ஐம்மு & காஷ்மீரில் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. எல்லை நிர்ணய ஆணையம் ஜம்மு & காஷ்மீர் பகுதியை ஒரே யூனியன் பிரதேசமாக பார்த்தது. எனவே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனந்த்நாக் பகுதியையும் ஜம்மு பிராந்தியத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​பகுதியையும் இணைத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த மறுசீரமைப்பு மூலம், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் சமமான எண்ணிக்கையில் 18 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு சில சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

“ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்யும் நோக்கத்திற்காக, 2002 (33 இன் 2002) பிரிவு 3 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்காக, எல்லை நிர்ணய ஆணையம் இந்திய அரசால் அமைக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம். ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அந்த தொகுதி மறுவரையறைப் பணிகளில் ஆணையம் தொடர்புடையது. இந்த இணை உறுப்பினர்கள் மாண்புமிகு லோக்சபா சபாநாயகரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள்,” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

“அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகள் (பிரிவு 330 மற்றும் பிரிவு 332) மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 இன் பிரிவு 14 இன் துணைப் பிரிவுகள் (6) மற்றும் (7) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டப் பேரவையில் பட்டியல் சாதியினர் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (STs)ஒதுக்கப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதன்படி, எல்லை நிர்ணய ஆணையம் முதல் முறையாக 9 சட்டமன்ற தொகுதிகளை எஸ்டி பிரிவினருக்கும், 07 சட்டமன்ற தொகுதிகளை எஸ்சி பிரிவினருக்கும் ஒதுக்கியுள்ளது. முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசியலமைப்பு சட்டப் பேரவையில் பட்டியல் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்பதைக் குறிப்பிடுவது மதிப்புக்குரியது, ”என்று தேர்தல் ஆணையம் கூறியது.

ஒரு வருடத்தில் எல்லை நிர்ணய நடவடிக்கைகளை முடிக்க ஆணைக்குழு பணிக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி, அதற்கு ஒரு வருட கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஏற்பட்ட பணிநிறுத்தம் காரணமாக அதிக முன்னேற்றம் அடைய முடியாததால், குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

தேசாய் தவிர, தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் ஜே & கே மாநில தேர்தல் ஆணையர் கே கே ஷர்மா ஆகியோர் எல்லை நிர்ணயக் குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தக் குழுவில் தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி.க்கள் ஃபரூக் அப்துல்லா, முகமது அக்பர் லோன் மற்றும் ஹஸ்னைன் மசூதி, பிரதமர் அலுவலகத்தின் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் பாஜகவின் ஜுகல் கிஷோர் சர்மா ஆகிய ஐந்து இணை உறுப்பினர்கள் உள்ளனர்.

“ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 மற்றும் எல்லை நிர்ணயச் சட்டம், 2002 ஆகியவை எல்லை நிர்ணய மறுவரையறை செயல்முறையை மேற்கொள்ளப்பட வேண்டிய பரந்த அளவுருக்களை வகுத்துள்ளன. எவ்வாறாயினும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணயம், சுமூகமான செயல்பாடு மற்றும் பயனுள்ள முடிவுகளுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளை ஆணையம் வகுத்துள்ளது, மேலும் எல்லை நிர்ணயச் செயல்பாட்டின் போது அதுவே பின்பற்றப்பட்டது” என்று தேர்தல் குழுவின் அறிக்கை கூறுகிறது.

“15-06-2020 அன்று இருந்தபடியே” நிர்வாக அலகுகள், அதாவது மாவட்டங்கள், தாலுகாக்கள், பட்வார் வட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் எல்லை நிர்ணயம் செய்யும் பணி முடியும் வரை “15-06-2020 நிலவரப்படி” உள்ள நிர்வாக அலகுகளை மாற்ற வேண்டாம் என யூனியன் பிரதேச நிர்வாகத்திடம் தெரிவித்தது என்றும் அறிக்கை கூறியது.

இதையும் படியுங்கள்: நார்டிக் தலைவர்களுடன் உக்ரைன் குறித்து மோடி உரையாடல்; பிரான்ஸ் அதிபருடனும் சந்திப்பு

“ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் முழுவதுமாக ஒரு மாவட்டத்தில் இருக்க வேண்டும் என்றும், மிகக் குறைந்த நிர்வாக அலகுகள் அதாவது பட்வார் வட்டங்கள் (மற்றும் ஜம்மு முனிசிபல் கார்ப்பரேஷனில் உள்ள வார்டுகள்) உடைக்கப்படாமல், ஒரே சட்டமன்றத் தொகுதியில் வைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டது. சட்டப் பேரவையில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்து, மொத்த மக்கள்தொகையில் அவர்களின் மக்கள்தொகை விகிதம் அதிகமாக இருக்கும் பகுதிகளில், இந்தச் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களைக் கண்டறிய, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மக்கள்தொகையின் சதவீதத்தை இறங்குவரிசையில் வரிசைப்படுத்துவதன் மூலம் தேவையான இடஒதுக்கீடு தொகுதிகளின் எண்ணிக்கையை அடையாளம் காண்பது என இந்த விஷயத்தில் கமிஷன் தீவிர கவனம் செலுத்தியது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Jk delimitation commission final notification assembly seats jammu kashmir

Exit mobile version