ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டிரக் டிரைவர் ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டு இரண்டு நாட்கள் கூட முடியாத நிலையில், மீண்டும் பல இடங்களில் அப்பாவி தொழிலாளர்களின் வாழ்க்கை பயங்கரவாத தாக்குதலுக்கு இரையாகி உள்ளது.
சத்தீஸ்கரில் மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்து, காஷ்மீரில் பணி புரியும் சேத்தி குமார் சாகர் என்கிற தொழிலாளி நேற்று பயங்கரவாதிகளால் சுடப்பட்டார்.
சத்தீஸ்கரில் ஜஞ்ச்கீர்-சம்பா மாவட்டத்தில் உள்ள பன்சுலா கிராமத்தில் பிறந்த சேத்தி குமார் சாகர், புல்வாமாவில் இருக்கும் ஒகூ கிராமத்தில் செங்கல் சூலையில் பணியாற்றி வந்தார். சேத்தி குமார் சாகர் நேற்று 'காகபோரா' பகுதியில் உள்ள 'நிஹாமா' கிராமத்தில் தனது உறவினருடன் நடந்துக் கொண்டிருக்கும் போது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற நாளிதழுக்கு சாகரின் தாயாரான மெத்திரீன் பேசுகையில், " என் மகனுக்கு உடல்நலம் சரியில்லாததால் நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை, இன்று வேலைக்கு கிளம்பிய சில நிமிடங்களிலே குமார் சாகர் இறந்துவிட்டார் என்று பாதுக்காப்புப் படையினர் வந்து சொல்லும் போது என்னால் நம்பமுடியவில்லை" என்று கண்ணீரோடு தெரிவித்தார்.
சகாரின் மனைவி சீமா இது குறித்து தெரிவிக்கையில்," சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை. ஏன்..... அவர் கொல்லப்பட்டார் என்ற காரணம் எங்கள் யாருக்குமே புரியவில்லை, ஆறு மாதம் கைகுழந்தைக்கு என்ன பதில் சொல்லுவேன், " என்று கண் கலங்கினாள்.
பிர்தீன் பாய் என்ற ஒரு பெண் கூலித் தொழிலாளி இது குறித்து தெரிவிக்கையில், "காஷ்மீரில் தங்கி வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலும் மறந்து விட்டோம், மிக பயமான அனுபவத்தை அனுபவித்து விட்டோம், உடனடியாக எங்கள் சொந்த ஊருகளுக்கு செல்ல திட்டமிட்டுளோம்" என்று தெரிவித்தார்.
சேத்தி குமார் சாகர் போன்ற தொழிலாளிகள் ஜம்மு-காஷ்மீருக்கு ஜூன்/ஜூலை போன்ற மாதங்களில் ஜம்மு-காஷ்மிர்க்கு வேலை தேடிவருவது வழக்கம். அக்டோபர் இறுதியில் அவர்கள் சொந்த ஊருகளுக்கு திரும்புவார்கள். சேத்தி குமார் சாகரின் உடம்பை சட்டிஸ்கர் மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்கான சிக்கலை மனதில் வைத்து, அவரின் இறுதி சடங்கை புல்வாமாவில் முடித்துள்ளனார் அவரது குடும்பத்தார்கள்.
காகபோரா பகுதியில் தாக்குதல் நடத்திய பிறகு, பயங்கரவாதிகள் ஆப்பிள் வணிகம் செய்யும் மக்களை குறிவைக்க ஆரம்பித்தனர். ஷோபியன் மாவட்டத்திலுள்ள ட்ரென்ஸ் என்கிற கிராமத்தில் ஆப்பிள் வர்த்தகத்தில் ஈடுபடும் பஞ்சாபை சேர்ந்த சரஞ்சீத் பாப்லி, சஞ்சய் சரயா போன்றவர்கள் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
ஷோபியன் துணை ஆணையர் யாசின் சவுத்ரி இது குறித்து கூறுகையில் : “பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சரஞ்சீத் பல ஆண்டுகளாக ஆப்பிள் வர்த்தகம் செய்பவர், வர்த்தகம் தொடர்பாக அவரும், அவரின் வர்த்தக கூட்டாளியும் ட்ரென்ஸ் கிராமத்தில் உள்ள உள்ளூர் பழ உற்பத்தியாளர் வீட்டில் தங்கியிருந்த போது தாக்கப்பட்டனர் , சரஞ்சீத் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார், சஞ்சயின் நிலை தற்போதுவரை கவலைக்கிடமாகவே உள்ளது" என்று கூறினார்.
தையல் தொழில் செய்யும் சரஞ்சீத்தின் சகோதரர் இது குறித்து தெரிவிக்கையில் ,"ஒவ்வொரு வருடமும் குறைந்தது 40 நாட்களாவது ஆப்பிள் வர்த்தகம் செய்பவர்களுக்கு உதவியாளாராக எனது சகோதரர் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்வார். இந்த ஆண்டு நாங்கள் அங்கு போகவேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் எனது சகோதரன் கேட்கவில்லை," என்றார்.
ஜம்மு - காஷ்மீர் : ஒரு வரலாற்றுப் பயணம் :
சரஞ்சீத்தின் மற்றொரு சகோதரர் இது குறித்து தெரிவிக்கையில், " 10 நாட்களுக்கு முன்பு தான் ஷோபியன் மாவட்டத்திற்கு சென்றார். அக்டோபர் 14 ம் தேதி காஷ்மீரில் தொலைதொடர்பு வசதி மீண்டும் தொடங்கிய போது, எங்களோடு தொலைபேசியில் பேசினார். அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை இன்னும் எங்களால் நம்ப முடியவில்லை, எங்கள் பெற்றோர்கள் இந்த அதிர்ச்சியை தாங்கமாட்டார்கள் என்பதால் இன்னும் விவரங்களை கூறவில்லை " என்று மனவேதனை அடைந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.